கவுண்டமணியுடன் யோகி பாபு.. ராமராஜன் உடன் யாரு இருக்காங்கன்னு பாருங்க.. அடுத்த படம் ரெடியா?
சென்னை: சமீபத்தில் கவுண்டமணியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் யோகி பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில், தற்போது ராஜராஜன் உடன் இருக்கும் புகைப்படத்தை பிரபல காமெடி நடிகர் வெளியிட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் ராஜ்ஜியத்தையே இன்றளவும் வைத்திருப்பவர் தான் ராமராஜன். மாங்குயிலே பூங்குயிலே என அவர் கரகாட்டம் ஆடிக்கொண்டு அந்த ரோஸ் பவுடரை அடித்த வண்ணம் வந்து நின்றதை எப்போதுமே ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு சாமானியன் படத்தின் மூலம் மீண்டும் ராமராஜன் கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில், ராமராஜன் அடுத்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமராஜன் உடன் ரெடின் கிங்ஸ்லி: கோலமாவு கோகிலா, டாக்டர், குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக கலக்கி வரும் ரெடின் கிங்ஸ்லி நடிகர் ராமராஜனை சந்தித்து எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். ராமராஜன் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறீர்களா என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் ஃபயர் எமோஜிக்களை பதிவிட்டு கேட்டு வருகின்றனர்.
பால்மெயின் டி-ஷர்ட்: ரெடின் கிங்ஸ்லி காஸ்ட்லியான பால்மெயின் டி-ஷர்ட் அணிந்திருக்க, அதே நேரம் ராமராஜன் தனது ஐகானிக்கான ரோஸ் கலர் சட்டையை அணிந்துக் கொண்டு அவருடன் பேசும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ராமராஜன் எப்போதுமே லெஜண்ட் தான் என பாராட்டி வருகின்றனர். கெட்டப் பழக்கங்கள் எல்லாம் திரையில் காட்டவே கூடாது என்றும் வில்லனாக நடிக்கவே மாட்டேன் என்கிற கொள்கையில் உள்ள ராமராஜன் கூடிய சீக்கிரமே நல்ல படத்துடன் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவுண்டமணியுடன் யோகி பாபு: சமீபத்தில், கவுண்டமணியை சந்தித்த யோகி பாபு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த காலத்து லெஜண்டுகள் எல்லாமே வேறலெவல் கெத்து தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்போதெல்லாம் அதுபோன்ற ஆட்களை பார்க்கவே முடியவில்லை என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











