Saamaniyan Box Office: ராமராஜன் ’சாமானியன்’ டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?.. வசூல் வருமா?

சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அயலான், கேப்டன் மில்லர், ப்ளூ ஸ்டார், லால் சலாம், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி, லவ்வர், ரத்னம் கடைசியாக வெளியான ஸ்டார் திரைப்படம் வரை பல படங்கள் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தன.

சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் மட்டும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த முதல் படமாக மாறியுள்ளது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் குஷ்புவே வெளியிட்டு இருந்தார்.

Ramarajan s Saamaniyan First Day Box Office Prediction

அரண்மனை 4 படத்துக்கு பிறகு வெளியான கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு திரைப்படமும் வசூலை வாரி குவிக்கவில்லை. இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் எந்த அளவுக்கு வசூல் செய்யும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மார்க்கெட் இல்லை: நடிகர் ராமராஜன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மார்க்கெட்டில் இருந்து காணப்படும் நிலையில் அவர் நடித்துள்ள சாமானியன் படத்துக்கு மக்கள் மத்தியில் சுத்தமாக வரவேற்பே இல்லை என்று தெரிகிறது. ராமராஜன் ரசிகர்கள் சிலர் மட்டுமே அந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

எல்லாமே பச்சை நிறம்: சாமானியன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் புக் மை ஷோவில் ஒரு தியேட்டரில் கூட முழுதாக டிக்கெட் புக்கிங் நடைபெறவில்லை. அனைத்துமே பச்சை நிறத்தில் காட்டுகின்றன. அதேபோல நாளை மற்றும் இந்த வார காட்சிகளும் டல் அடித்து காணப்படுகின்றன. இந்த வாரமும் தமிழ் சினிமாவுக்கு பாதிப்புதான் என இதன் மூலம் தெரிகிறது. அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வசூல் செய்யுமா? என்பதே கேள்விக்குறி தான் என்கின்றனர்.

பிடி சார் டிக்கெட் புக்கிங் எப்படி?: நாளை வெளியாக உள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள பிடி சார் படத்துக்கும் பல திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அந்தப் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு ஆர்வம் இல்லை என்பது டிக்கெட் புக்கிங் பார்த்தாலே தெரிகிறது.

இந்தியன் தாத்தா காப்பாத்துவாரா?: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படமாவது தமிழ் சினிமாவை காப்பாற்றுமா? என தியேட்டர் ஓனர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X