தொடரும் சோகம்.. ராமாயணம் சீரியலில் நடித்த 'ராவணன்' நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
மும்பை: இந்தி மொழியில் வெளியான ராமாயணம் சீரியலில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் காலமானார். அவருக்கு வயது 82.
Recommended Video
இந்தி சின்னத்திரையிலும் சினிமாவிலும் அடுத்தடுத்து தொடரும் மரணங்களால் சக கலைஞர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தாரக் மேத்தா கா ஓல்டா சாஷ்மாவின் நடிகர் கன்ஷ்யாம் நாயக் புற்றுநோயுடன் நீண்டகாலமாக போராடி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்ஷ்யாம் காலமானார்.

அரவிந்த் திரிவேதி மறைவு
அவரது மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளவில்லை இந்நிலையில் மற்றொரு பிரபல சீரியல் நடிகரான அரவிந்த் திரிவேதி காலாமாகியுள்ளார். மூத்த நடிகரான அரவிந்த் திரிவேதி ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

ராமாயணத்தில் ராவணனாக நடித்தவர்
குறிப்பாக இந்தியில் வெளியான ராமானந்த் சாகரன் ராமாயன் சீரியலில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதன்மூலம் பெரும் பிரபலமானார் நடிகர் அரவிந்த திரிவேதி. இந்த சீரியலின் மூலம் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது.

மறைவை உறுதி செய்த மருமகன்
இந்நிலையில் அரவிந்த் திரிவேதியின் மரணம் குறித்த துரதிர்ஷ்டமான செய்தியை அவரது மருமகனான கஸ்துப் திரிவேதி உறுதி செய்துள்ளார். கஸ்துப் திரிவேதி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ள தகவலில் "அவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இன்று மாலை இறுதி சடங்கு
அது பல உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுத்தது." என கூறியுள்ளார். மேலும் மரணமடைந்த அரவிந்த் திரிவேதியின் இறுதி சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறும் என தெரிகிறது.

குஜராத்தி சினிமாவில் 40 ஆண்டுகள்
அரவிந்த் திரிவேதி, பல பிரபலமான குஜராத்தி படங்களில் பணியாற்றியுள்ளார். தனது வாழ்க்கையில் 40 ஆண்டு காலத்தை குஜராத்தி சினிமாவிலேயே கழித்துள்ளார் அரவிந்த் திரிவேதி. ராமாயணத்தில் மட்டுமல்ல, விக்ரம் அவுர் பீட்டால் சீரியலிலும் நடித்துள்ள அரவிந்த் திரிவேதி சிறந்த நடிகராக வலம் வந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்
அவர் ஹிந்தி மற்றும் குஜராத்தி உட்பட 300 படங்களில் நடித்தார். இந்திய சினிமாவில் வெற்றி பெற்ற நடிகராக வலம் வந்த அரவிந்த் திரிவேதி 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் சபர்கதா தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாக்டவுனின் போது ஒளிபரப்பான ராமாயணம்
பிரபல நடிகர் விஜய் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திரைப்பட சான்றிதழ் தணிக்கை வாரியத்தின் (CBFC) செயல் தலைவராகவும் இருந்தார் அரவிந்த் திரிவேதி. கடந்த ஆண்டு லாக்டவுனின் போது, தொலைக்காட்சி நிகழ்ச்சி ராமாயன் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.
மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த நடிகர்கள்
இது இந்திய பார்வையாளர்களால் விரும்பப்பட்டது. தூர்தர்ஷன் சேனலில் இந்த புராண நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிய பிறகு நிகழ்ச்சியில் இருந்த அனைத்து நடிகர்களும் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் ட்விட்டரில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications