twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறு ஒளிபரப்பிலும் அசத்திய ராமானந்த் சாகரின் 'ராமாயணம்'.. உலக சாதனைப் படைத்த நிகழ்ச்சியாக மிரட்டல்!

    By
    |

    டெல்லி: உலக அளவில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சியாக ராமாயணம் சாதனைப் படைத்துள்ளது.

    Recommended Video

    Doordarshan Re telecasts Shaktimaan and Ramayana

    கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் இதன் பாதிப்பில் சிக்கியுள்ளன.

    அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன.

    சந்திரமுகி 2 கதை இதுதான்.. ரகசியத்தை ஓப்பன் பண்ண இயக்குநர் பி. வாசு.. அப்போ சந்திரமுகி யாரு?சந்திரமுகி 2 கதை இதுதான்.. ரகசியத்தை ஓப்பன் பண்ண இயக்குநர் பி. வாசு.. அப்போ சந்திரமுகி யாரு?

    கொரோனா

    கொரோனா

    இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் சில மாநிலங்களில் கட்டுக்குள் இல்லாததால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    ராமாயணத் தொடர்

    ராமாயணத் தொடர்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராமாயணத் தொடர் தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

    82 சதவீதம் பேர்

    82 சதவீதம் பேர்

    ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான டிவி தொடர், ராமாயணம். 1987 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பான இந்த தொடர் மொத்தம் 78 பகுதிகள் வரை சென்றது. அப்போது, கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் பார்த்து சாதனை படைத்ததாகக் கூறப்பட்டது.

    மறு ஒளிபரப்பு

    மறு ஒளிபரப்பு

    டி.வி.க்கள் அதிகம் இல்லாத காலத்திலேயே இந்த தொடர் இந்தச் சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது, மறு ஒளிபரப்பில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது, பல ரெக்கார்டுகளை உடைத்து, உலக அளவில் அதிகமானவர்கள் பார்த்தத் தொடராக ராமாயணம் சாதனைப் படைத்துள்ளது. இதை தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.

    உலக அளவில்

    உலக அளவில்

    ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்துள்ள, தூர்தர்ஷன், 'மறு ஒளிபரப்பில் ராமாயணம் உலகளவில் சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்துள்ளனர். உலக அளவில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக ராமாயணம் மாறியிருக்கிறது' என்று கூறியுள்ளது.

    English summary
    Ramanand Sagar's popular TV serial 'Ramayan' which is re-airing on Doordarshan became the world's most-watched show on April 16 with with 7.7 crore viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X