எங்க தல ஸ்ட்ரெய்ட்டா ராமனாத்தான் நடிப்பார்… பிரபாஸ் ரசிகர்கள் மல்லுக்கட்டு

சென்னை: இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் பிரபாஸ் நடிக்கப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியான நிலையில், நாங்கள் இன்னும் கதையையே முடிவு செய்யவில்லை. அதன் பிறகே இத்திரைப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது பற்றி முடிவு செய்யமுடியும் என்று இயக்குனர் நிதேஷ் திவாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார் சிச்சோர் திரைப்படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி. சில தினங்களுக்கு முன்னர் வெளியான முழு நீள காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வெற்றியை தொடர்ந்து அல்லு அரவிந்த் தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கவிருக்கும் லட்சிய திரைப்படம் ராமாயணா. சுமார் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது. இப்படத்தை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் ஸ்டோரி டிஸ்கசன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ராமாயணா

ராமாயணா

இந்த நிலையில் ராமாயணா படம் பற்றி பல வதந்திகள் திரையுலகிற்குள் பரவி வருகிறது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் ராமர் கதாபாத்திரத்திலும், தீபிகா படுகோனே சீதா கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள், என்று ஏற்கனவே கூறி வந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நெகடிவ் வேடமான ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸ் ராவணன் கதாபாத்திரத்திற்கு ஆளுமையும், பலத்தையும் சேர்ப்பார் போன்ற வதந்திகள் பரவி வருகின்றன. இப்படி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டே போகிறார்கள். இந்த வதந்திகளை நம்பி வரும் பிரபாஸ் ரசிகர்கள், ராமாயணம் படத்தில் பிரபாஸ் நடிப்பார் என்றாலும் ராமர் கதாபாத்திரத்தை தான் ஏற்பாரே தவிர ராவணன் கதாபாத்திரத்தை நிச்சயம் ஏற்று நடிக்க மாட்டார் என்று கொந்தளிக்கின்றனர்.

ஸ்கிரிப்ட் வேலைகள்

ஸ்கிரிப்ட் வேலைகள்

இது ஒருபுறம் இருக்க ராமாயணம் படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி கூறுகையில், நாங்கள் இன்னும் ஸ்கிரிப்ட் வேலைகளையே முடிக்கவில்லை. அதற்கான வேலைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் முடிந்த பிறகு தான் தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதே தெரிய வரும்.

வதந்திகளை நம்பாதீங்க

வதந்திகளை நம்பாதீங்க

அதுவரையிலும், இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்பதை முடிவு செய்ய முடியாது. அதற்கு முன்னரே இந்த மாதிரியான வதந்திகள் பரவி வருவது வேடிக்கையாக உள்ளது என்பதோடு இது உண்மையல்ல என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X