Ramayana Teaser: ஹனுமன் ஜெயந்திக்கு வெளியான ’ராமாயணா’ டீசர்.. ராமராக ரன்பீர் எப்படி?.. புஷ்பக விமானம்!

சென்னை: நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ராமாயணா படத்தின் டீசர் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

ராம நவமிக்கு ராமாயணா டீசர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று அந்த டீசரை வெளியிட்டுள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமான காட்சிகளுடன் ராமாயணா உருவாகியிருப்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது.

Ramayana Teaser Out now Did Ranbir Kapoor fulfil audience expectations in his Rama look

டீசரின் இறுதியில் யஷ் ராவணனாக நடந்து வரும் பேக்‌ஷாட் காட்சியும் அவரது புஷ்பக விமானமும் கண்ணை பறிக்குது. சுமார் 2000 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெளியானது ராமாயணா டீசர்: 5000 ஆண்டுகளாக இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ராமரை வழிபட்டு வருகின்றனர். ராமாயணத்தை மையப்படுத்தி ஏகப்பட்ட மெகா சீரியல்கள், படங்கள் என பல வருடங்களாக வெளியாகி வந்தாலும், அந்த கதையில் உள்ள ஆழம் மற்றும் கற்பனைக்கு எட்டாத சக்திகள் காரணமாக தொழில்நுட்பம் வளர வளர ராமாயணத்தை எந்தளவுக்கு பிரம்மாண்டமாக காட்ட முடியுமோ இந்திய இயக்குநர்கள் அதனை அந்தளவுக்கு பிரம்மாண்டமாக காட்டிக் கொண்டே செல்கின்றனர். அந்த வரிசையில் நித்திஷ் திவாரி புதிய உலகத்தையே உரூவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Ramayana Teaser Out now Did Ranbir Kapoor fulfil audience expectations in his Rama look

ராமராக ரன்பீர் கபூர் எப்படி?: பிரம்மாஸ்த்ரா, அனிமல் என தொடர்ந்து மெகா பட்ஜெட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ரன்பீர் கபூர். துரந்தர் 2 மூலம் ரன்வீர் சிங் மிகப்பெரிய வெற்றியை பாலிவுட்டில் கொடுத்த நிலையில், அந்த படத்தின் வசூலை விட அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களை கவரும் வகையில் இந்த ராமர் கதாபாத்திரம் உள்ளது. ஆனால், தென்னிந்தியர்களை கவரும் வகையில் அவரது தோற்றம் பெரிதாக ஈர்க்கவில்லை. ரன்பீர் கபூரின் ராமர் தோற்றத்தை விட படம் முழுக்க சுற்றியிருக்கும் பிரம்மாண்டமும் பில்டப்புகளும் வெகுவாக கவர்கின்றன.

சாய் பல்லவி, யஷ்: படத்துக்காக செலவு செய்துள்ள பிரம்மாண்ட விஷயங்களையே ஹைலைட் செய்துள்ளனர் இந்த டீசரில். சாய் பல்லவியை பெரிதாக ஃபோகஸ் செய்யவில்லை. யஷ் கடைசியில் ராவணனாக நடந்து வரும் தோற்றமே மிரட்டுகிறது. அவருக்காக உருவாக்கப்பட்டுள்ள புஷ்பக விமானம் பிரம்மாண்டத்தின் உச்சம். ஆரம்பத்தில் வரும் இலங்கையில் நடக்கும் யுத்த காட்சிகளில் ஹாலிவுட் வாடை ஹெவியாக அடிக்கிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் ராமரை பக்த கோடிகள் வணங்கி பாக்ஸ் ஆபீஸை நிரப்புவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X