Ramayana: The Legend of Prince Rama Review: சிறுவர்களை கவர்ந்த ராமாயணா அனிமேஷன் படம் எப்படி இருக்கு?

சென்னை: அனைவருக்கும் தெரிந்த ராமாயண கதையை ஜப்பானியர்கள் அனிமேஷன் படமாக எடுத்துள்ளார்கள். இப்படத்திற்கு 'ராமாயணம் - The Legend Of Prince Rama' என பெயரிட்டுள்ளார்கள். கீக் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 24ந் தேதி வெளியானது. இந்த அனிமேஷன் படத்தை சிறுவர்கள் தியேட்டரில் ரசித்து பார்த்து வருகின்றனர்.

சம்பூர்வ ராமாயணம், ராமாயணம், அதிபுருஷ் என பல பெயர்களில் ராமாயணம் படமாக வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த முறை ராமாயணத்தை அனிமேஷன் படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இயக்குநர்கள் யுகோ சகோ, ராம் மோகன் மற்றும் கொயிச்சி சசகி ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளனர். மேலும், பாகுபலி, ஆர்ஆர்ஆர் என படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த அனிமேஷன் படத்திற்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.

ramayana the legend of prince rama review

'ராமாயணம் - The Legend Of Prince Rama: வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தில், ராமர் பிறந்தது, வளர்ந்து சீதையை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்து கொண்டது. பின் கூனியின் சூழ்ச்சியால், 12 ஆண்டுகள் வனவாசம் சென்றது. பரதன், ராமரின் பாதணியை எடுத்து வந்து அயோத்ததியில் ஆட்சி செய்வது. காட்டுக்கு வரும் ராவணன் சீதையின் அழகில் மயங்கி முனி வடிவத்தில் வந்து சீதையை கடத்தி செல்வது, பின் அனுமானின் துணையுடன் சீதையை மீட்டு வருவது என இரண்டரை மணி நேரத்தில் ராமாயணத்தின் அனைத்து முக்கியமான விஷயத்தையும் இந்த அனிமேஷன் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நல்ல அனிமேஷன் படம்: ராமாயணம் என்பது மிகப் பெரிய கதை. அதை இரண்டு மணி நேரத்தில் சொல்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதை சவாலாக எடுத்து நல்ல ஒரு அனிமேஷன் படத்தை கொடுத்து இருக்கிறார்கள். இப்படத்திற்காக 450 ஓவிய கலைஞர்கள் இணைந்து ராமர், சீதா, லக்ஷ்மணன், ராவணன், அனுமன் என அனைத்து ராமாயண கதாபாத்திரங்களை ஒரு லட்சம் பேர் இணைந்து கையால் வரைந்துள்ளனர். பொதுவாக யானிமேஷன் படத்தில், பாத்திரங்களின் ரியாலிட்டிக்கு விலகி இருக்கும். ஆனால், இந்த படத்தில் பாத்திரங்களை நினைவு படுத்துவம் வகையில் உள்ளது.

அனைத்து மொழிகளிலும்: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியான இந்த படத்திற்கு தமிழில், ராமர் கதாபாத்திரத்திற்கு செந்தில் குமாரும், சீதாவுக்கு டி.மகேஷ்வரியும், ராவணனுக்கு பிரவீன் குமாரும், லக்‌ஷ்மணனுக்கு தியாகராஜன், ஹனுமானுக்கு லோகேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த படத்தை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

படத்தின் வசூல்: 'ராமாயணம் - The Legend Of Prince Rama' படம் வெளியான முதல் நாளில் ₹40 லட்சத்தை வசூலித்ததாக Sacnilk தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் நாளில், ₹90 லட்சத்தை வசூலித்து இரண்டு நாளில் படம் ₹1.25 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.இன்று விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ராமாயணம்: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமர் படத்தை இந்தியாவின் கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X