நடிகை ரம்பா மீது வரதட்சணை கொடுமை வழக்கு.. பொய்யான புகார் என அண்ணன் மறுப்பு!
நடிகை ரம்பா அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான வழக்கு என்று ரம்பாவின் அண்ணன் மறுத்துள்ளார்.
நடிகை ரம்பாவின் அண்ணன் சீனிவாச ராவின் மனைவி பல்லவி ஹைதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். சீனிவாச ராவும், ரம்பாவும் சேர்ந்து வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு
இதைத்தொடர்ந்து, ரம்பா மீதும், அவருடைய அண்ணன் சீனிவாச ராவ் மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரம்பா மீதும், அவருடைய அண்ணன் சீனிவாசராவ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

மறுப்பு
தன் மனைவியின் இந்த புகாருக்கு பதில் அளித்து, ரம்பாவின் அண்ணன் சீனிவாச ராவ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "ரம்பா மீது, என் மனைவி பல்லவி பொய் புகார் கொடுத்திருக்கிறார். எனக்கும், என் மனைவி பல்லவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கிறோம்.

ரம்பா கனடாவில் அல்லவா இருக்கிறார்...
ரம்பாவுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் கணவர்-குழந்தையுடன் கனடாவில் வசிக்கிறார். திருமணத்துக்குப் பின் அவர் இந்தியாவுக்கு வரவில்லை. அப்படியிருக்கும்போது, பல்லவியிடம் வரதட்சணை கேட்டு எப்படி கொடுமைப்படுத்தியிருக்க முடியும்.

ரூ.1 கோடி நகை திருடியவர்
கடந்த டிசம்பர் மாதம் நான், எனது தங்கை ரம்பாவைப் பார்ப்பதற்காக கனடா போயிருந்தேன். அப்போது என் மனைவி பல்லவி, சென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து ரம்பாவுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுவிட்டார்.

போலீசில் புகார்
இதுதொடர்பாக என் தந்தை, பல்லவி மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்திருக்கிறார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே என் மனைவி கொடுத்துள்ள வரதட்சணைப் புகார் பொய்யானது. ஆதாரமற்றது," என்றார்.


Click it and Unblock the Notifications











