»   »  தொடையழகி ரீ-என்ட்ரி.. சினிமாவில் மீண்டும் நடிக்கவிருக்கும் ரம்பா!

தொடையழகி ரீ-என்ட்ரி.. சினிமாவில் மீண்டும் நடிக்கவிருக்கும் ரம்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமாவில் மீண்டும் நடிக்கவிருக்கும் ரம்பா!

சென்னை : தமிழ்த் திரையுலகத்தில் 90-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பிரபு, சரத்குமார் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தொடையழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ரம்பா.

ரம்பா, 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். திருமணம் செய்துகொண்டு கணவர் குழந்தைகளுடன் கனடாவில் செட்டிலானார். மீண்டும் திரும்பி வந்து டி.வி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகக் கலந்து கொண்டார்.

Ramba re-entry to cinema

அப்போதே அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகின. ஆனால், அவர் படங்களில் நடிக்கவில்லை. தற்போது குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ரம்பா முடிவெடுத்துள்ளாராம்.

முன்னாள் ஹீரோயின் என்றாலே அம்மா கதாபாத்திரங்கள்தான் தேடி வரும். பல முன்னாள் நடிகைகள் இப்போது அப்படித்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரம்பா அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பாரா எனத் தெரியவில்லை.

ரம்பா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி என பல மொழிகளில் நடித்தவர் என்பதால் ஒரு மொழியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வேறு மொழியில் நடிக்க சான்ஸ் கிடைத்துவிடும் என எதிர்பார்த்து வருகிறாராம்.

English summary
Actress Ramba was the leading heroine of the 90s in the Tamil cinema. Ramba has decided to and act in character roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X