ரம்பா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு செக் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வாரத்தில் நடிகை ரம்பா ஆஜராகி ஜாமீன் பெறவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பைனான்சியர் மாணிக்கவேல் என்பவரது சார்பில் செக் மோசடி வழக்குதொடரப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் கடனைத் திருப்பிக் கட்ட ரம்பா கொடுத்த காசோலைகள் திரும்பி வந்து விட்டதால் இந்தவழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ரம்பா சார்பில் சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது ரம்பா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், ஒரு வாரத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிசரணடைந்து ஜாமீன் பெறுமாறு உத்தரவிட்டார்.
செக் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வாரத்தில் நடிகை ரம்பா ஆஜராகி ஜாமீன் பெறவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பைனான்சியர் மாணிக்கவேல் என்பவரது சார்பில் செக் மோசடி வழக்குதொடரப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் கடனைத் திருப்பிக் கட்ட ரம்பா கொடுத்த காசோலைகள் திரும்பி வந்து விட்டதால் இந்தவழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ரம்பா சார்பில் சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது ரம்பா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது.
இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், ஒரு வாரத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிசரணடைந்து ஜாமீன் பெறுமாறு உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications