செக் மோசடி : கோர்ட்டில் ஆஜராகிறார் ரம்பா நிதி நிறுவனத்திற்கு வழங்கிய ரூ. 75 லட்சத்திற்கான காசோலைகள் திரும்பி வந்த வழக்கில் கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ள நடிகை ரம்பா, இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி கைது வாரண்ட் உத்தரவைவாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுக்கிறார்.சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றிடமிருது த்ரீ ரோஸஸ் படத்திற்காக கடன் வாங்கியிருந்தார் ரம்பா. இந்தப் படம்படுதோல்வியடைந்ததால், அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந் நிலையில், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் என ரூ. 75 லட்சத்துக்கு இரண்டுகாசோலைகளை ரம்பா, அந்த நிதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.ஆனால் ரம்பா வழங்கிய இரண்டு காசோலைகளும் திரும்பி வந்து விட்டதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னைசைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகாமல்இருந்து வந்தார் ரம்பா.இந் நிலையில் கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் ரம்பா வரவில்லை. இதையடுத்து ரம்பா மீது கைது வாரண்ட்பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ரம்பா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி தன் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை ரத்து செய்யுமாறுகோரிக்கை விடுக்கிறார்.
நிதி நிறுவனத்திற்கு வழங்கிய ரூ. 75 லட்சத்திற்கான காசோலைகள் திரும்பி வந்த வழக்கில் கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ள நடிகை ரம்பா, இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி கைது வாரண்ட் உத்தரவைவாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றிடமிருது த்ரீ ரோஸஸ் படத்திற்காக கடன் வாங்கியிருந்தார் ரம்பா. இந்தப் படம்படுதோல்வியடைந்ததால், அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இந் நிலையில், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் என ரூ. 75 லட்சத்துக்கு இரண்டுகாசோலைகளை ரம்பா, அந்த நிதி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.
ஆனால் ரம்பா வழங்கிய இரண்டு காசோலைகளும் திரும்பி வந்து விட்டதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னைசைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகாமல்இருந்து வந்தார் ரம்பா.
இந் நிலையில் கடந்த முறை நடந்த விசாரணையின் போதும் ரம்பா வரவில்லை. இதையடுத்து ரம்பா மீது கைது வாரண்ட்பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ரம்பா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி தன் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை ரத்து செய்யுமாறுகோரிக்கை விடுக்கிறார்.


Click it and Unblock the Notifications