»   »  செக் மோசடி: ரம்பா தாய், தம்பிக்கு சம்மன் செக் மோசடி வழக்குகளில் 30ம் தேதி ஆஜராகும்படி நடிகை ரம்பாவின் தாய் மற்றும் தம்பிக்கு மதுரை நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.நடிகை ரம்பாவுக்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். ஒழுங்காக நடித்து நாலு காசைப் பார்த்துக் கொண்டிருந்தஅவருக்கு திடீரென சொந்தப் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. விதி யாரை விட்டது? தனது தோழிகளான ஜோதிகா, லைலாவை வைத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் த்ரீ ரோஸஸ் என்ற படத்தை தயாரித்தார்.அவ்வளவு தான் அந்தப் படம் மண்ணைக் கவ்வ, ரம்பாவின் கதை அதோ கதியானது.த்ரீ ரோஸஸ் படம் ரம்பாவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டது. இந்தப் படத்திற்காக அவர்வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க, நீதிமன்றத்திற்கும், வீட்டுக்குமாக அலைந்தார்.இதனால் கோலிவுட்டை சில காலம் மறந்தே போனார். இதன் பிறகு சமீபத்தில் தான் ரம்பா ஒரு படத்தில் புக்கானார். இதனால்சோகத்தை மறந்து படத்தில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.இது ஒரு புறமிருக்க சொந்தப் படம் தயாரித்து ரம்பா பட்ட பாடு தெரிந்தும், கடந்த ஆண்டு ரம்பாவின் தாய் உஷா ராணியும்,தம்பி வாசுவும் ஒரு படம் தயாரிப்பதற்காக மதுரையை சேர்ந்த சங்கரன் என்பவரிடம் தனித்தனியாக ரூ. 5 லட்சம் கடன்வாங்கியுள்ளனர்.ஆனால் அவர்கள் படம் தயாரிக்கவில்லை என்றதோடு மட்டுமல்ல வாங்கிய கடனுக்காக கொடுத்த செக்கும் திரும்பி விட்டது.இதனால் சங்கரன் இவர்கள் இரண்டு பேர் மீதும் 2 வழக்குகளை மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரம்பாவின் தாய் மற்றும் தம்பி இருவரும்ஆஜராகவில்லை. இவர்களது சார்பில் வழக்கறிஞர் நடேஷ் ராஜா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி சீதாராமன், செப்டம்பர் 30ம் தேதி உஷா ராணியும், வாசுவும் கண்டிப்பாக ஆஜராகும்படி சம்மன்அனுப்ப உத்தரவிட்டார்.இதே மதுரை நீதிமன்றத்தில் தான் ரம்பாவின் செக் மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செக் மோசடி: ரம்பா தாய், தம்பிக்கு சம்மன் செக் மோசடி வழக்குகளில் 30ம் தேதி ஆஜராகும்படி நடிகை ரம்பாவின் தாய் மற்றும் தம்பிக்கு மதுரை நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.நடிகை ரம்பாவுக்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். ஒழுங்காக நடித்து நாலு காசைப் பார்த்துக் கொண்டிருந்தஅவருக்கு திடீரென சொந்தப் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. விதி யாரை விட்டது? தனது தோழிகளான ஜோதிகா, லைலாவை வைத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் த்ரீ ரோஸஸ் என்ற படத்தை தயாரித்தார்.அவ்வளவு தான் அந்தப் படம் மண்ணைக் கவ்வ, ரம்பாவின் கதை அதோ கதியானது.த்ரீ ரோஸஸ் படம் ரம்பாவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டது. இந்தப் படத்திற்காக அவர்வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க, நீதிமன்றத்திற்கும், வீட்டுக்குமாக அலைந்தார்.இதனால் கோலிவுட்டை சில காலம் மறந்தே போனார். இதன் பிறகு சமீபத்தில் தான் ரம்பா ஒரு படத்தில் புக்கானார். இதனால்சோகத்தை மறந்து படத்தில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.இது ஒரு புறமிருக்க சொந்தப் படம் தயாரித்து ரம்பா பட்ட பாடு தெரிந்தும், கடந்த ஆண்டு ரம்பாவின் தாய் உஷா ராணியும்,தம்பி வாசுவும் ஒரு படம் தயாரிப்பதற்காக மதுரையை சேர்ந்த சங்கரன் என்பவரிடம் தனித்தனியாக ரூ. 5 லட்சம் கடன்வாங்கியுள்ளனர்.ஆனால் அவர்கள் படம் தயாரிக்கவில்லை என்றதோடு மட்டுமல்ல வாங்கிய கடனுக்காக கொடுத்த செக்கும் திரும்பி விட்டது.இதனால் சங்கரன் இவர்கள் இரண்டு பேர் மீதும் 2 வழக்குகளை மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரம்பாவின் தாய் மற்றும் தம்பி இருவரும்ஆஜராகவில்லை. இவர்களது சார்பில் வழக்கறிஞர் நடேஷ் ராஜா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி சீதாராமன், செப்டம்பர் 30ம் தேதி உஷா ராணியும், வாசுவும் கண்டிப்பாக ஆஜராகும்படி சம்மன்அனுப்ப உத்தரவிட்டார்.இதே மதுரை நீதிமன்றத்தில் தான் ரம்பாவின் செக் மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்குகளில் 30ம் தேதி ஆஜராகும்படி நடிகை ரம்பாவின் தாய் மற்றும் தம்பிக்கு மதுரை நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.

நடிகை ரம்பாவுக்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். ஒழுங்காக நடித்து நாலு காசைப் பார்த்துக் கொண்டிருந்தஅவருக்கு திடீரென சொந்தப் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. விதி யாரை விட்டது?


தனது தோழிகளான ஜோதிகா, லைலாவை வைத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் த்ரீ ரோஸஸ் என்ற படத்தை தயாரித்தார்.அவ்வளவு தான் அந்தப் படம் மண்ணைக் கவ்வ, ரம்பாவின் கதை அதோ கதியானது.

த்ரீ ரோஸஸ் படம் ரம்பாவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டது. இந்தப் படத்திற்காக அவர்வாங்கிய கடன் கழுத்தை நெறிக்க, நீதிமன்றத்திற்கும், வீட்டுக்குமாக அலைந்தார்.

இதனால் கோலிவுட்டை சில காலம் மறந்தே போனார். இதன் பிறகு சமீபத்தில் தான் ரம்பா ஒரு படத்தில் புக்கானார். இதனால்சோகத்தை மறந்து படத்தில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

இது ஒரு புறமிருக்க சொந்தப் படம் தயாரித்து ரம்பா பட்ட பாடு தெரிந்தும், கடந்த ஆண்டு ரம்பாவின் தாய் உஷா ராணியும்,தம்பி வாசுவும் ஒரு படம் தயாரிப்பதற்காக மதுரையை சேர்ந்த சங்கரன் என்பவரிடம் தனித்தனியாக ரூ. 5 லட்சம் கடன்வாங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் படம் தயாரிக்கவில்லை என்றதோடு மட்டுமல்ல வாங்கிய கடனுக்காக கொடுத்த செக்கும் திரும்பி விட்டது.இதனால் சங்கரன் இவர்கள் இரண்டு பேர் மீதும் 2 வழக்குகளை மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரம்பாவின் தாய் மற்றும் தம்பி இருவரும்ஆஜராகவில்லை. இவர்களது சார்பில் வழக்கறிஞர் நடேஷ் ராஜா ஆஜரானார்.


வழக்கை விசாரித்த நீதிபதி சீதாராமன், செப்டம்பர் 30ம் தேதி உஷா ராணியும், வாசுவும் கண்டிப்பாக ஆஜராகும்படி சம்மன்அனுப்ப உத்தரவிட்டார்.

இதே மதுரை நீதிமன்றத்தில் தான் ரம்பாவின் செக் மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil