twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரை நீதிமன்றத்தில் ரம்பாமதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியரான அன்புச் செழியன் தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை ரம்பா மதுரைநீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டார்.சொந்தப் படமான த்ரீ ரோஸஸை எடுப்பதற்காக அன்புச் செழியனிடம் நடிகை ரம்பா வட்டிக்கு பணம் பெற்றார். அந்தப்பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக காசோலை கொடுத்தார். ஆனால் அந்தக் காசோலைகள் திரும்பி வந்ததால், மதுரைநீதிமன்றத்தில் அன்புச் செழியன் ரம்பா மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் குமுதம் வார இதழுக்கு ரம்பா அளித்த பேட்டியொன்றில்,அன்புச் செழியன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.இதைத் தொடர்ந்து ரம்பா மீது மதுரை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அன்புச்செழியன் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கு இதுவரை நான்கு முறை விசாரணைக்கு வந்தது.ஆனால் ஒருமுறை கூட ரம்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று நடைபெறும் விசாரணையின்போது ரம்பாகண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரம்பா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவருடன் அவரதுசகோதரரும் வந்தார்.அப்போது ரம்பாவிடம் குற்றப் பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    By Staff
    |

    மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியரான அன்புச் செழியன் தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை ரம்பா மதுரைநீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டார்.

    சொந்தப் படமான த்ரீ ரோஸஸை எடுப்பதற்காக அன்புச் செழியனிடம் நடிகை ரம்பா வட்டிக்கு பணம் பெற்றார். அந்தப்பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக காசோலை கொடுத்தார். ஆனால் அந்தக் காசோலைகள் திரும்பி வந்ததால், மதுரைநீதிமன்றத்தில் அன்புச் செழியன் ரம்பா மீது வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் குமுதம் வார இதழுக்கு ரம்பா அளித்த பேட்டியொன்றில்,அன்புச் செழியன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இதைத் தொடர்ந்து ரம்பா மீது மதுரை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அன்புச்செழியன் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கு இதுவரை நான்கு முறை விசாரணைக்கு வந்தது.

    ஆனால் ஒருமுறை கூட ரம்பா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று நடைபெறும் விசாரணையின்போது ரம்பாகண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரம்பா நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவருடன் அவரதுசகோதரரும் வந்தார்.

    அப்போது ரம்பாவிடம் குற்றப் பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

      Read more about: ramba in madurai court
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X