கவர்ச்சி குறித்த கேள்வி.. கூகுளில் போய் தேடுங்க.. கடுப்பான தமன்னாவின் தரமான பதில்!
சென்னை: பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வர என்ன காரணம் என்று செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான தமன்னா அவருக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கார்த்தியின் ஜப்பான் படம்: இவ்விழாவில் கார்த்தியின் படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ், சத்யராஜ், விஷால்,ஆர்யா, ஜெயம் ரவி, தமன்னா என பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய தமன்னா, கார்த்தியினால்தான் நான் தமிழ் கற்றுக்கொண்டேன். அவர் அனைவரையும் என்டர்டைன் செய்வதற்குப் புதுபுது கதாபாத்திரங்களை செய்து நடித்து வருகிறார் என்றார்.
மேஜிக் ஹோம்: இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை ரம்பாவின் கணவரின் மேஜிக் ஹோம் ஷோவை திறந்துவைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமன்னா அவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், நான் நன்றாகவே சமைப்பேன். பொதுவாக எனக்கு சவுத் இந்தியன் உணவு மிகவும் பிடிக்கும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சாப்பாடு ரொம்ப பிடிக்கும் என்றார்.
தமன்னா பேட்டி: இதையடுத்து, பாகுபலிக்கு பிறகு தமிழில் நீங்கள் அதிக படத்தில் நடிக்கவில்லை ஏன் என்று கேட்டார். என்னது தமிழில் நடிக்க வில்லையா... போய் கூகுளில் தேடி பாருங்க என்று பதில் அளித்தார். இதையடுத்து, பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வலம்வர என்ன காரணம் என்று செய்தியாளர் கேட்டார். இந்த கேள்வியால் மேலும் கடுப்பான தமன்னா, இது மேஜிக் ஹோம் நிகழ்ச்சி, இதில் தேவையில்லாத கேள்வியை கேட்காதீர்கள் சற்று கோவமாகவே தமன்னா பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ரம்பாவின் கணவர், தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
காவாலா: நடிகை தமன்னா அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு கலக்கலாக நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துப்போட்டார். இந்த பாடல் இணையத்தில் அனைவருக்கும் பிடித்த பாடல் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











