வெரி பேட்.. நாங்க ரெண்டு பொண்ணுங்க இருக்கோம்.. ஆனால் அவர்... ரம்பாவோடு ஆதங்கப்பட்ட விஜயகுமார் மகள்
சென்னை: சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கொடிகட்டிப் பறக்கும் நடிகைகள் அதன் பின்னர் திருமணம் குழந்தைகள், குடும்பம் என சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். அதன் பின்னர் குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்த பின்னர் அவர்கள் சினிமாவில் தங்களது மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களிலும் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருவது கோலிவுட்டில் வாடிக்கையாகிவிட்டது. அப்படி இருக்கும்போது நடிகைகள் சின்னத் திரைக்குச் சென்று அங்கும் ஒரு கலக்கு கலக்குவது என்பதை சில நடிகைகள் மட்டும் செய்து வருகிறார்கள்.
அப்படி இருக்கும்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி செட்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை வீடியோவாக எடுத்து பகிர்ந்து உள்ளார்கள். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவர்களாக உள்ள நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பகிர்ந்து உள்ளார்கள்.

அதாவது அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதன் நடுவர்களாக நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் உள்ளார்கள். சாண்டி மாஸ்டர் இது மட்டும் இல்லாமல், படங்களுக்கு நடனம் அமைப்பது, தனது நடனப் பள்ளியில் மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது என செம பிஸியாக உள்ளார். அண்மையில் பிரபுதேவா நடத்திய நடன ஆர்கெஸ்ட்ராவில் கலந்து கொண்டு சாண்டி மாஸ்டர் நடனம் ஆடியிருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

ரம்பா & ஸ்ரீதேவி: மிகவும் பிஸியாக அவர் இருப்பதால், ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 செட்டில் ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு தூங்கிக் கொண்டு உள்ளார். இது தொடர்பாக ரம்பாவும் ஸ்ரீதேவி விஜயகுமாரும் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவிட்டு அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார்கள். அந்த வீடியோவில் அவர்கள் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடியோ: அதாவது, " எல்லோரும் இங்கு ரொம்பவும் சின்சியராக பணியாற்றிக் கொண்டு உள்ளார்கள். ஆனால் ஒருவர் மட்டும் ரொம்பவும் கடினமாக உழைத்துக் கொண்டு உள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை நீங்களே பாருங்கள். ( சாண்டி மாஸ்டர் தூங்கிக் கொண்டு இருப்பதை காட்டுகிறார்கள்). தொடர்ந்து பேசுகையில், எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் மட்டும் தூங்கிக் கொண்டு உள்ளார். நாங்கள் ரெண்டு பொண்ணுங்க நாங்க என்ன செய்ய முடியும். அவர் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார் என பேசியுள்ளார்கள்.
சாண்டி மாஸ்டர்: இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர்கள் அதில் சாண்டி மாஸ்டரையும் டேக் செய்து கொலாபரேஷன் செய்துள்ளார்கள். மேலும் அந்த எபிசோட் தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்கள். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











