ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவா?... ஷாக்கான திரையுலகம் !
சென்னை : தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர்.
இவர், ராம்சரணை வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கான பட்ஜெட் தான் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகி உள்ளது.

ராம்சரண் 15
தமிழில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பட பிரச்சனை காரணமாக அப்படத்தை பாதியில் நிறுத்தி வைத்துவிட்டு தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இரட்டை வேடத்தில்
தெலுங்கில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ராம்சரண், இந்த படத்தில், இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் அரசியல் தொடர்பான கதை என்றும் தகவல் கசிந்துள்ளது

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில்
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் உரிமையை டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு விட்டதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ஆர்ஆர்
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் வெளிவந்த பின்பு ராம்சரண் இந்திய ஸ்டாராக உயரும் வாய்ப்பு அதிகமாகும். எனவே அவருடைய அடுத்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அந்த படமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Recommended Video

இத்தனை கோடியா?
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கரின் படத்தில் பிரம்மாண்டம் இருக்கும் தான் அதற்காக ஒரே ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா தெலுங்கு சினிமா வட்டாரமே அதிர்ச்சியில் வாய் பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











