சமந்தாவுக்கு ஜோடியாக காது கேளாதவரா..? - 'ரங்கஸ்தலம்' சர்ப்ரைஸ்!
Recommended Video

ஐதராபாத் : தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்து வெளியாகவிருக்கும் படம் 'ரங்கஸ்தலம்'. 1985-ல் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் சமந்தா மிக வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறார் சமந்தா.
இந்நிலையில், 'ரங்கஸ்தலம்' படத்தில் நடிகர் ராம்சரண் காது கேளாதவராக நடித்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ரங்கஸ்தலம்
'ரங்கஸ்தலம்' திரைப்படம் திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் செம ட்ரெண்டிங் ஆனது.

ராம்சரண்
பக்கா கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக ராம்சரண், சமந்தா இருவருமே தங்களை கிராமத்து கதாபாத்திரங்களாக முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்துள்ளனர். பாவாடை தாவணி அணிந்தவாறு சமந்தாவின் புகைப்படங்கள் முன்பே சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தன.

காதுகேளாதவராக நடிக்கும் ராம்சரண்
இதுவரை ரொமான்டிக், ஆக்ஷன் படங்களில் அதிகம் நடித்துள்ள ராம்சரண், இந்தப் படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் ராம்சரண் காது கேளாதவராக நடித்துள்ளார் எனும் தகவலும் வெளியாகியுள்ளது.

மார்ச் 30 ரிலீஸ்
பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, கெளதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 30-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











