ராஜயோகத்தில் ராம்சரண்.. குவிகிறது பிறந்தநாள் வாழ்த்து.. ராஜமெளலி, ஷங்கர் என வரிசை கட்டும் வாய்ப்பு!

சென்னை: நடிகர் ராம்சரணின் 36வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

டோலிவுட் நடிகராக இருந்த ராம்சரண் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் மூலமாக பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார்.

அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஹேப்பி பர்த்டே ராம்சரண்

ஹேப்பி பர்த்டே ராம்சரண்

பிரபல டோலிவுட் நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் டோலிவுட்டில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். 1985ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி சென்னையில் பிறந்த ராம்சரண் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் நடிகர் ராம் சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில்

மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்த நடிகர் ராம்சரண் மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார். ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அல்லுரி சீதாராமராஜு கதாபாத்திர போஸ்டரை இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டு ராம்சரணை வாழ்த்தினார்.

ஷங்கர் இயக்கத்தில்

ஷங்கர் இயக்கத்தில்

டோலிவுட் நடிகராக இருந்த ராம்சரண் ராஜமெளலி படம் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இதிகாச படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார் ராம்சரண்.

ராஜயோகம்

ராஜயோகம்

நடிகர் பிரபாஸை தொடர்ந்து ராம்சரணின் மார்க்கெட்டும் இந்தியளவில் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்துள்ளது. பாலிவுட் நடிகர்களுக்கு போட்டியாக ராம்சரண் வளர்ந்து வருகிறார். ராஜமெளலி மற்றும் ஷங்கர் உள்ளிட்ட பிரம்மாண்ட இயக்குநர்களின் பல நூறு கோடி படங்கள் வெளியானாலும் ராம்சரணின் மார்க்கெட் உலகளவில் உயரும் என்றும் கருதப்படுகிறது.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

நடிகர் ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் குவித்து வருகின்றனர். காஜல் அகர்வால், நடிகர் வெங்கடேஷ், ஈஷா ரெப்பா, ஆலியா பட், சமந்தா, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X