என் வீடு முழுக்க அரபிக் குத்து பாட்டுத் தான் ஓடிக்கிட்டு இருக்கும்.. ராம்சரண் ஓப்பன் டாக்!
சென்னை: நடிகர் ராம்சரண் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது வீடு முழுக்க அரபிக் குத்து பாடல் தான் இசைத்துக் கொண்டிருக்கும் என பேசியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் தனது ஒட்டுமொத்த நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார் ராம்சரண்.
அடுத்ததாக தனது அப்பா சிரஞ்சிவீ உடன் அவர் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படம் ரிலீசாக போகிறது.

மெகா ஸ்டார் மகன்
அப்பா சிரஞ்சீவி மெகா ஸ்டார், சித்தப்பா பவன் கல்யாண் பவன் ஸ்டார் இப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து மெகா பவர் ஸ்டாராக மாறி உள்ளார் ராம்சரண். ஆர்ஆர்ஆர் படத்தில் அல்லூரி சீதாராமராஜுலு கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை படைத்துள்ளார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணின் நட்பு ஆஃப் ஸ்க்ரீனிலும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருந்தது.

ஆச்சார்யா
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் நடித்துள்ள ஆச்சார்யா படம் வரும் ஏப்ரல் 29ம் தேதி திரைக்கு வருகிறது. மார்ச் மாதம் ஆர்ஆர்ஆர் படத்தை கொடுத்து ஆயிரம் கோடி வசூலை அள்ளிய ராம்சரண் அப்பா உடன் இணைந்து அடுத்த மாதமே இன்னொரு வசூல் வேட்டைக்கு ரெடியாகி விட்டார்.

ராம்சரண் பேட்டி
ஆச்சார்யா படத்தை புரமோட் செய்ய பேட்டி கொடுத்தும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளிலும் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டு வருகிறார். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மற்றும் ராம்சரண் பங்கேற்ற பேட்டி நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பற்றி ராம்சரண் பேசியுள்ளார்.

வீடு முழுக்க அரபிக் குத்துதான்
அந்த பேட்டியில் பேசிய ராம்சரண், எங்கே வீட்டு கிச்சனுக்கு போனாலும், என் ரூமுக்கு போனாலும், காரில் சென்றாலும், ஏன் என் பிளே லிஸ்ட் என எங்கே போனாலும் அரபிக் குத்து பாட்டுத் தான் ஓடிட்டு இருக்கும் என ராம்சரண் பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. 300 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை அள்ளி பெரிய சாதனை படைத்துள்ளது அரபிக் குத்து பாடல்.

பூஜா ஹெக்டேவுக்கு ஹாட்ரிக்
ராம்சரண் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் இரண்டாவது படம் ஆச்சார்யா என்றால், நடிகை பூஜா ஹெக்டேவுக்கோ இது ஹாட்ரிக் படம். ராதே ஷ்யாம், பீஸ்ட் படங்களை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் விரைவில் ஆச்சார்யா படம் வெளியாகிறது. நீலம்பரி எனும் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் பாவாடை தாவணி அணிந்த கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











