நாட்டு நாட்டு.. பிஸ்னஸ் மேனுக்கு ராம் சரண் சொல்லிக்கொடுத்த ரகசியம்

ஹைதராபாத்: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு ராம்சரண் ஒரு விஷயத்தை சொல்லிக்கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குநர் ராஜமௌலி. இவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி 1, பாகுபலி 2 உள்ளிட்ட படங்களை பார்த்த நடிகர்கள் இவரது படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டுமென காத்திருக்கின்றனர். ராஜமௌலி இயக்கும் படங்கள் வசூலிலும் சக்கைப்போடு போடக்கூடியவை.

1000 கோடி ரூபாய் வசூலித்த இயக்குநர்

1000 கோடி ரூபாய் வசூலித்த இயக்குநர்

இவர் சமீபத்தில் ராம்சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் இவர்கள் தவிர்த்து ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவிலும் மாஸ் காட்டும் ஆர்.ஆர்.ஆர்

சர்வதேச அளவிலும் மாஸ் காட்டும் ஆர்.ஆர்.ஆர்

இந்தியா மட்டுமின்றி இந்தப் படமானது சர்வதேச அளவிலும் வரவேற்பைப் பெற்றது. கடந்த வருடம் அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது அங்கு இருந்தவர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். அதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு சர்வதேச விருதுகள்

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு சர்வதேச விருதுகள்

படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானதோடு அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலும் பலரை கவர்ந்தது. படத்துக்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இந்தச் சூழலில் நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி கோல்டன் க்ளோப் விருதை பெற்றார். அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷனிலும் அந்தப் பாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சர்வதேச கார் பந்தயம்

இந்தியாவில் சர்வதேச கார் பந்தயம்

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஃபார்முலா இ கார் பந்தயம் நடந்தது. மஹிந்திரா, ஜாகுவார், பார்ஷ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் இதில் பங்கேற்றன. இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கார் பந்தயம் என்பதால் ராம்சரண் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

தொழிலதிபருக்கும் ரகசியம் சொல்லிக்கொடுத்த ராம்சரண்

அப்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு நாட்டு நாட்டு பாடலில் நடனத்தில் பட்டையை கிளப்பிய ராம் சரணம் பாடலுக்குரிய ஸ்டெப்பை கற்றுக்கொடுத்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மேலும், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த ம்ஹிந்திரா, "கார் பந்தயத்தை தாண்டி நாட்டு நாட்டு பாடலின் அடிப்படை ஸ்டெப்ஸ்களை ராம்சரணிடமிருந்து கற்றுக்கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X