அம்பரீஷுடன் விடிய விடிய அந்தாக்ஷரி ஆடினோமே, இப்போ அவர் இல்லையே: நடிகர் உருக்கம்

By Siva

Recommended Video

அம்பரீஷ் மரணம்: பல பேர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி

பெங்களூர்: அம்பரீஷுடன் அண்மையில் அந்தாக்ஷரி விளையாடியதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று முன்தினம் பெங்களூரில் மரணம் அடைந்தார். பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் அம்பரீஷ் பற்றி நடிகர் ரமேஷ் அரவிந்த், நடிகை பாரதி விஸ்ணுவர்தன் கூறியிருப்பதாவது,

அம்பரீஷ்

அம்பரீஷ்

ஒரு நடிகர் மற்றும் சினிமா துறையில் உள்ளவர் என்பதால் தினமும் பலருடன் பேச வேண்டி இருக்கும். ஆனால் அம்பரீஷ் போன்று ஒருவரை இனிமேல் நிச்சயமாக பார்க்க முடியாது. அவர் தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ்ந்தார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் அவர். அவரிடம் தலைமை பண்பு நிறைய இருந்தது. அதனால் தான் மக்கள் அவரை நம்பினார்கள் என்கிறார் ரமேஷ் அரவிந்த்.

பார்ட்டி

பார்ட்டி

அம்பரீஷ் என் முதல் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பார்ட்டிகளில் அவர் இருந்தால் தான் களை கட்டும். அண்மையில் தான் நானும், அம்பரீஷும் விஸ்ணுவர்தன் சாரின் வீட்டில் சந்தித்து அந்தாக்ஷரி விளையாடினோம். விடி விடிய அந்தாக்ஷரி விளையாடினோம். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

பாரதி

பாரதி

சினிமா துறையில் நட்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் விஸ்ணுவர்தனும், அம்பரீஷும். அதனால் தான் அம்பரீஷின் மரணம் என்னை பெரிதும் பாதித்துள்ளது. நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது வழக்கமாகிவிட்டது. அம்பரீஷ் ஒரு அருமையான மனிதர். அவர் உண்மையான நண்பர். எனக்கு பேராதரவாக இருந்தவரை இழந்துவிட்டேன் என்று நடிகை பாரதி விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

கணவர்

கணவர்

அம்பரீஷ் முன் உதாரணமாக இருந்த தந்தை, கணவர். அவரை போன்றவர்களை பார்ப்பது அரிது. அவரின் மனைவி சுமலதா மற்றும் மகன் அபிஷேக்கிற்கு கடவுள் தெம்பை அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அம்பரீஷ் இந்த உலகை விட்டுச் சென்றாலும் நம்முடன் தான் உள்ளார் என்கிறார் பாரதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X