அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்யுமா?
சென்னை: சோஷியல் மீடியாவில் அஜித்துக்கு ஆதரவாக தொடர்ந்து பாசிட்டிவ் கருத்துக்களையும் அஜித் படங்களுக்கான ஹைப்புகளையும் ஏற்றி வரும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் என்றால் அது ரமேஷ் பாலா மற்றும் மனோபாலா தான். அஜித் குமார் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாக காத்திருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் எந்தளவுக்கு வசூல் செய்யும் என ரமேஷ் பாலா தற்போது ட்வீட் ஒன்றை போட்டு சோஷியல் மீடியாவில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்துள்ளார்.
ஒரு படம் நல்ல படமா? அல்லது மொக்கை படமா? என்பதை சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்தே ரசிகர்கள் முடிவு செய்து வருகின்றனர். அதற்காக சில தயாரிப்பு நிறுவனங்களே உண்மையான வசூலை விட அதிகமாக வசூல் செய்ததாக ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர்களையும் வெளியிடுவதாக சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலேயே சிறப்பாக ஓடவில்லை என்றும் பாலிவுட்டில் மட்டுமே ஓடுவதாக தனஞ்செயன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி 200 கோடி வசூல்: கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததா இல்லையா என்றே தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அந்தளவுக்கு வசூல் செய்திருக்கும் என கணிப்புகள் வெளியாகின. இந்நிலையில், லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டிலேயே வசூல் செய்யும் என ரமேஷ் பாலா ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல தடைகளை தாண்டி உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி வசூல்: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த நிலையில், எந்தவொரு தாமதத்தையும் செய்யாமல் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்துள்ளார். குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் 250 கோடி வசூலை தமிழ்நாட்டிலேயே செய்யும் என்றும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.

கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்: உலகளவில் 200 கோடி விடாமுயற்சி மற்றும் 250 கோடி குட் பேட் அக்லி என்று சொன்னால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலேயே இந்தளவுக்கு வசூல் வரும் என்றால் அது எப்படி திமிங்கலம் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸ் எல்லாம் முக்கியமே கிடையாது, இரண்டு படங்களும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இருந்தாலே போதும் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலை அஜித்தின் 2 படங்களும் முறியடிக்கிறதா என்று பார்ப்போம் என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. அஜித் மற்றும் பிரசாந்த் நீல் இணையும் படம் 1000 கோடி வசூலை கோலிவுட்டுக்கு கொண்டு வரும் என்றும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











