உதயநிதி எது சொன்னாலும் நம்பாதீங்க.. என்ன பிரபல நடிகர் இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: சினிமா விநியோகஸ்தர், தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் பிறகு ஹீரோவாகவும் மாறினார். அவர் நடித்த படங்களில் சில படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. பிறகு அரசியலுக்கு சென்றதால் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தற்போது முழுக்க சினிமாவிலிருந்து விலகியிருக்கும் அவர்; தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர். இந்நிலையில் அவர் குறித்து பிரபல நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரம்பத்தில் பெரிதாக அரசியல் ஆசை இல்லை. மாறாக சினிமாவை தயாரிப்பதும், விநியோகம் செய்வதுமாக இருந்தார். ஆதவன் படத்தில் சின்ன ரோலில் நடித்த அவர்; ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து அவர் நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன. அதேசமயம் நிமிர், கண்ணே கலைமானே, மனிதன், கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்கள் அவரது திறமையை காண்பிக்கும் விதமாக அமைந்தன.
மாமன்னன் உதயநிதி ஸ்டாலின்: சூழல் இப்படி இருக்க கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். பிறகு அமைச்சரானார். இதற்கிடையே சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்த அவர் கடைசியாக ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்தார். அதன்படி மாமன்னன் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவருடன் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உதயநிதிக்கும் முழு திருப்தியை கொடுத்தது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சினிமாவிலிருந்து ஒதுங்கி அமைச்சராக தனது பணிகளை செய்துவந்த உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே இனி மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதால் நடிப்பிலிருந்து மட்டுமின்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்தார். அவர் அதிலிருந்து விலகினாலும் அந்த நிறுவனம் இப்போதும் பல படங்களை ஃபுல் ஃபார்மோடு தமிழ்நாடில் வெளியிட்டுவருகிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் அந்த நிறுவனம்தான் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் கண்ணா பேட்டி: இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கொடுத்த பழைய பேட்டி ஒன்று ட்ர்னெடாகியிருக்கிறது. அவர் கொடுத்த அந்தப் பேட்டியில், "உதயநிதியை நம்பவேகூடாது. அவர் ஒரு பயங்கரமான ஆள். ஆதவன் படத்தில் அவரும் கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு சீனில் நடித்தார்கள். பொதுவாக ரவிக்குமார் படத்தில் நடித்தால் அந்த சீனை நான்தான் டைரக்ட் செய்வேன். அப்படித்தான் அந்த சீனையும் டைரக்ட் செய்தேன்.
கிடையவே கிடையாது என்றார்: அப்படி அந்த சீனை டைரக்ட் செய்து முடித்தது உதயநிதியிடம் சென்று, உங்களை முதன்முதலாக இயக்கியது நான்தான். எனவே உங்களை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறேன். நடியுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவரோ, 'ஐயையோ நான் நடிகனாகவே மாட்டேன். கே.எஸ்.ரவிக்குமார் சொன்னதால்தான் இந்த சீனிலேயே நடித்தேன் என்று சொன்னார். ரவிக்குமாரும் அந்த சமயத்தில் உதயநிதியிடம், 'நன்றாகத்தான் நடிக்கிறீர்கள். பேசாமல் நீங்கள் நடிகராகிவிடலாமே' என்றார்.
அரசியலுக்கும் அப்படித்தான் சொன்னார்: அதற்கும் உதயநிதி, அந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது சார் என்று கூறிவிட்டார். ஆனால் பின்னால் நடிகராகிவிட்டார். அவர் நடிகரான பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம், என்ன உதயநிதி நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு நடித்துவிட்டீர்கள் பிறகு என்ன அரசியல்தானே என்று கேட்டேன். அதற்கும் அவர் அரசியலுக்கு நான் வருவேனா? அட வேலையை பாருங்க சார் என்று சொல்லிவிட்டு இப்போது துணை முதலமைச்சராகிவிட்டார். எனவே அவர் சொல்வதை நம்பவேகூடாது" என்றார்.


Click it and Unblock the Notifications











