போலீஸ் அதிகாரியா ... புது கெட்டப்பில் களமிறங்கும்.. ரமேஷ் கண்ணா

சென்னை : நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

குணசித்திர நடிகர், இயக்குனர் மற்றும் நாடக நடிகர் இது போன்ற பலமுகம் கொண்டவர் தான் ரமேஷ் கண்ணா. தனது ஐந்து வயதில் இருந்தே ஆர்.ஸ் மனோகர் அவர்களின் நாடகங்களில் நடித்துள்ளார். சுமார் ஆயிரம் நாடகங்களில் நடித்து உள்ள பெருமை இவருக்கு உண்டு. ரமேஷ் கண்ணா இவர் நம் நாட்டு ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பாராட்டுக்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramesh Kanna is playing the role of a police officer

தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் கண்ணா பாண்டியராஜன், விக்ரமன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் பணிபுரிந்து இருக்கிறார். இயக்குனர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் மூலம் தனது காமெடி சரவெடியை ஆரம்பித்தார் ரமேஷ் கண்ணா.

Ramesh Kanna is playing the role of a police officer

இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார் அதற்கு உதாரணம் தெனாலி, படையப்பா, பிரண்ட்ஸ், வில்லன், பஞ்சதந்திரம், ஜெமினி, சாமி, வீரம் போன்ற படங்களில் இவரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். மேலும், பிரண்ட்ஸ் படத்தில் இவர் விஜய், சூர்யா அவர்களின் நண்பனாக வந்து காமெடியில் அசத்தியதை விட தனது நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இருந்தார். இவர் அஜித் மற்றும் தேவயானியை வைத்து தொடரும் என்ற படத்தை இயக்கியும் உள்ளார். மேலும் பல படங்களுக்கு இவர் வசனமும் எழுதியுள்ளார்.

Ramesh Kanna is playing the role of a police officer

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக தனக்கென்று உரிய பாணியில் கையாண்டு ரசிகர்களிடம் நல் மதிப்பை பெற்றுவிடுவார். தற்போது கூட ரமேஷ் கண்ணா புதுமுக இயக்குனர் சுப்பிரமணி இயக்கும் படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது இயல்பான நடிப்பு மற்றும் காமெடியால் கலக்கிய ரமேஷ் கண்ணா அவர்கள் போலீஸ் வேடத்தில் நம்மை இன்னமும் சந்தோஷப்படுத்த விரைவில் வருகிறார்.

Ramesh Kanna is playing the role of a police officer

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X