அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்
Recommended Video
சென்னை: அஜீத் குமார் உடன் இணைந்து நடித்துள்ள நடிகர் ரமேஷ் கண்ணா, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அஜீத் குமார் படம் பிரிண்ட் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்ட காலண்டரை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அஜீத் ரசிகர்கள் ரமேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர்.
ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவின் முக்கியமான குணசித்திர நடிகர்களில் ஒருவர். இவர் திரைத்துறைக்கு வர காரணம் இவருடைய அப்பா தான். பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் மூன்றாவது மகன் தான் ரமேஷ் கண்ணா.

இவர் திரைத்துறையில் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் இயக்குநர் விக்ரமன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவரை விக்ரமன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் மூலம் காமெடியனாக அறிமுகம் செய்தார். அதற்கு முன்பே சில படங்களில் சில சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வடிவேலுவின் ப்ரென்ட்ஸ் பட காமெடி ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாக, அதில் ரமேஷ் கண்ணா சுத்தியலை வடிவேலு தலையில் போட்டு விடும் காமெடி வீடியோ மீம்ஸ்மாக வெளிவந்து உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது. அப்போது ப்ரே ஃபார் நேசமணி என்ற ஹாஸ்டேக் உருவாகி உலகம் முழுவதும் அந்த காமெடி மீண்டும் பேசப்பட்டது.
அப்போது சில சேனல்களுக்கு பேட்டி அளித்த ரமேஷ் கண்ணா, அது ஒரு பழைய காமெடி என்று உதறி தள்ளாமல், தற்போது இருக்கும் ட்ரென்டை புரிந்து கொண்டு சேனல்களுக்கு நேசமனியின் தலையில் சுத்தியலை போட்டதுக்கு மன்னிப்பு கோரி நகைச்சுவையாக பேட்டி கொடுத்திருந்தார். ரமேஷ் கண்ணா நகைச்சுவை மிகுந்த நடிகர் மற்றும் இயல்பு வாழ்க்கையிலும் நகைச்சுவை உணர்வோடு இருப்பவர்.
ரமேஷ் கண்ணா தல அஜித்துடன் காதல் மன்னன், வில்லன், அட்டகாசம், வீரம் போன்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தன்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் படமான தொடரும் திரைப்படத்தின் நாயகனே அஜீத்தான். இப்படத்தில் அஜீத் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதன் காரணமாகவே எந்த இடத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் அஜீத்தை விட்டு கொடுக்காமல் அஜீத்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தற்போது ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அஜித் படம் பிரிண்ட் செய்யப்பட்ட 2020 ஆண்டு காலண்டரை வெளியிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











