லாக்டவுன் நேரத்து மலரும் நினைவுகள்.. ரமேஷ் கண்ணா.. அஜித்துக்கு சொன்ன அட்வைஸ் !

சென்னை : லாக்டவுன் நேரத்தில் பல நடிகர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரமேஷ் கண்ணா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். பல சினிமா நினைவுகளை சுவாரஸ்யமாக நம்மிடம் பகிர்ந்தார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் அஜித், எப்போதும் வெளியில் பேசுவதில்லை, பேட்டிகொடுப்பதும் இல்லை என்பது அவரது ஸ்டைல். இவரின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக விஜயுடன் அவர் நடித்த 'காதலுக்கு மரியாதை' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

Ramesh Kanna shared many interesting memories

அப்படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக "கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார். அமர்க்களம் படம் நடிக்கும் போது அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இது அனைவருக்கும் தெரிந்தது.

அமர்க்களம் படத்தில் அஜித்துடன், ரமேஷ் கண்ணா நடிக்கும்போது, அவர் ஷாலினியை காதலிப்பது தெரியாது, ஆனால் இருவரும் நேராக பேசாமல் ஃபோன் மூலமாகவே பேசுவார்களாம், இதை கவனிக்காத ரமேஷ் கண்ணா, அஜித்தை அழைத்து "இந்த பாருபா, கல்யாணம் பண்ணினா ஒரு நல்ல குடும்ப பெண்ணா சினிமா சாரல் இல்லாத ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, ஒரு நடிகையை மட்டும் கல்யாணம் பண்ணிக்காதப்பா "நடிகையை கல்யாணம் பண்ணா வாழ்க்கை நிம்மதியா இருக்காது ஒரே பிரச்சனை தான் வரும் . லைப் டஃப் டாஸ்க் ஆகி விடும் என்று அட்வைஸ் கூறியுள்ளார்.

Ramesh Kanna shared many interesting memories

செஞ்சிக்கோட்டை தான் லொகேஷன் அந்த சமயத்தில் ஷூட்டிங் பிரேக் சமயத்தில் ரமேஷ் கண்ணா சொல்லும் அட்வைஸை பொறுமையாக கேட்டுவிட்டு அமைதியாக இருப்பாராம் அஜித். நடப்பதை கவனித்த அந்த படத்தின் இயக்குனர் சரண், சார், ஷாலினியும் அஜித்தும் ஏற்கனவே லவ் பண்றாங்க இதெல்லாம் அவங்க கிட்ட பேசாதீங்க என்று ரமேஷ் கண்ணாவுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். விரைவில் திருமண பத்திரிகை வர இருக்கிறது என்று செய்தி சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்துள்ளார்.

Ramesh Kanna shared many interesting memories

தம்பி கோச்சிக்காதப்பா தெரியாம சொல்லிட்டேன் என்று அஜித்திடம் சிரித்தபடியே கூறியுள்ளார் ரமேஷ் கண்ணா. அது மட்டும் அல்லாமல் அஜித் ரமேஷ் கண்ணா நட்பு இன்று வரை மரியாதைக்குரியதாகவே இருந்து வருகிறது. அஜித் தேவயானி நடித்த தொடரும் என்ற படத்தை இயக்கிய ரமேஷ் கண்ணா தொடர்ந்து இயக்குனராக தொடரவில்லை. ஆனால் நல்ல நண்பனாக அஜித்திடம் எப்போதும் இருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X