MGR மனைவிக்கு நான் முறைப்பையன்.. என்னங்க ரமேஷ் கண்ணா இப்படி சொல்லுறாரு?
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என ஜொலித்து வருபவர் ரமேஷ் கண்ணா. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருக்கும் இவருக்குமான நட்பு என்பது இவர்கள் இருவரின் வெற்றிக்கும் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. கே. எஸ். ரவிக்குமாரின் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியது மட்டும் இல்லாமல், துணை கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். இப்படி இருக்கும்போது, அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மறைந்த முதலமைச்சருக்கு சகலை உறவு வேண்டும் என்றும், அவரது மனைவி ஜானகிக்கு தான் முறைப்பையன் என்றும் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஷாக் கொடுக்கும் தகவலாக உள்ளது.
அவர் பேசுகையில், " ஜானகியின் மகனைத்தான் எனது தங்கை திருமணம் செய்துள்ளார். அதற்கு முன்னதாகவே ஜானஜி எங்களுக்கு உறவுக்காரர் தான். ஜானகி எனது அப்பாவின் அக்காவின் மகள். அதாவது எனக்கு அத்தை பெண், எனக்கு முறைப்பெண். நானும் எம்.ஜி.ஆரும் சகலை. நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரொம்பவும் வயது வித்தியாசம் என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

சகலை: அப்போது எங்கள் குடும்பத்திற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிரச்னை. எம்.ஜி.ஆர் ஜானகியை திருமணம் செய்ய எனது அப்பா சம்மதிக்கவில்லை. அவர்களின் திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து, அதில் வெற்றி பெற்று, அவர்கள் இருவரும் 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழக் கூடாது என்று உத்தரவு பெற்றவர். அதன் பின்னரும் இருவரும் ஒன்றாக இருந்தார்கள், அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.
வழக்கு: அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழலாம் என்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது 1962 குப் பிறகு தான். எனது அப்பாதான் ஜானகியை கும்பகோணத்தில் இருந்து ஜானகியின் 13வது வயதில் அவரை அழைத்து வந்து நடனம் சொல்லிக் கொடுத்து, நடிப்பு சொல்லிக் கொடுத்து ஸ்டாராக மாற்றியது எனது அப்பாதான்.
புத்தகத்தில்: எம்.ஜி.ஆரின் நான் ஏன் பிறந்தேன் புத்தகம் படித்தால் அதில் அவர் எனது அப்பா குறித்து எழுதி இருப்பார். அந்த புத்தகத்தில் கார்டியன் கார்டியன் என்று அவர் குறிப்பிட்டு எழுதி இருப்பது எல்லாம் எனது அப்பாவைத்தான். எனது அப்பாவிடம் எம்.ஜி.ஆர் பெண் கேட்டு வரும்போது, எனது அப்பா கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு, பேசினார். அப்பாவுக்குப் பின்னால் இருந்த ஜானகி சண்டை போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டு இருப்பார் என்று தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











