மற்ற படத்தின் வசூலைக்கூட சொல்லாத சன் பிக்சர்ஸ்.. காரை பரிசாக கொடுத்தது விஜய்யை வெறுப்பேத்தவா!
சென்னை: கலாநிதி மாறன் ரஜினிக்கு காரை பரிசாக அளித்தது விஜய்யை வெறுப்பேற்றத்தான் என இணையத்தில் பரவி வரும் செய்திக்கு ரமேஷ் பிரபா விளக்கம் கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு இருந்த அனைத்து விதமான சர்ச்சைக்கும் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி பதிலடி கொடுத்துவிட்டார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் பிளாக் பஸ்டர் ஹிட்: ஜெயிலர் படம் வெளியான முதல் வாரத்திலேயே தயாரிப்பு நிறுவனம் 375 வசூல் ஆனதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் நிச்சயம்700 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் வாரத்தில் 525 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
சொகுசு கார் பரிசு: ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன் காசோலை கொடுத்து பாராட்டி BMW X7 மாடல் காரை அவருக்கு பரிசாக கொடுத்தார். ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கு Porsche காரையும், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் Porsche காரை பரிசாக வழங்கினார்.
மொத்த வசூல்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள, ரமேஷ் பிரபா, ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் ரூ. 620 கோடி இருக்கும் என்றும், தமிழகத்தில் ரூ 200 கோடியை நெருங்கிவிட்டது, இந்திய அளவில் ரூ 410 கோடியாக உள்ளது. பொன்னியின் செல்வம் படம் ரூ500 கோடியை வசூலித்து பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த சாதனையை ஜெயிலர் படம் முறியடித்துள்ளது. இனி வரும் காலங்களில் ரஜினியின் படம் வெற்றிப்படமாக இருக்கும், ரஜினி ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்க மாட்டாங்க என்றார்.

விஜய்யை வெறுப்பேத்தவா: இதையடுத்து செய்தியாளர், நடிகர் விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்கு படங்களில் இதுவரை நடித்து இருக்கிறார். ஆனால், அந்த படங்களின் வசூலைக்கூட சொல்லாத சன் பிக்சர்ஸ், விஜய்யை வெறுப்பேத்தத்தன் இந்த பரிசுகளை கொடுப்பதாக பேசப்படுகிறது இது உண்மையான என கேட்டார்.
வசூலை சொல்லாத சன் பிக்சர்ஸ்: இதற்கு பதில் அளித்த ரமேஷ் பிரபா, வெறுப்பேத்த என்று சொல்லிவிட முடியாது. ஜெயிலர் படத்தையும், சூப்பர் ஸ்டாரையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரொம்ப ஸ்பெஷலாக பார்க்கிறது என்பதன் வெளிப்பாடு தான் காரை பரிசளித்தது. இதுனால் வரை சன்பிக்சர்ஸ் எந்த படத்தின் வசூலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இல்லை. ஆனால், முதன் முறையாக ஜெயிலர் படத்தின் வசூலை அறிவித்துள்ளது. ஜெயிலர் படம் 600 கோடியை தாண்டிவிட்ட போதும் சன்பிக்சர்ஸ் 25 கோடியை குறைத்துத்தான் அறிவித்துள்ளது என ராமேஷ் பிரபா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











