புத்தாண்டு அதுவுமா புது கார் வாங்கிய ரமேஷ் திலக்.. மனைவி, மகனுடன் மகிழ்ச்சி.. வாழ்த்திய நடிகைகள்!

சென்னை: புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் பல பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டாடும் உற்சாக புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நிலையில், நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக் புதிதாக கார் வாங்கிய உற்சாகத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அவருக்கு ஏகப்பட்ட நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் மாப்பிள்ளை, அஜித்தின் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அடையாளம் தெரியாமல் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த ரமேஷ் திலக் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தில் கூரியர் பாயாக நடித்திருப்பார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இவருக்கான இடத்தை பெற்றுத் தந்தது.

ramesh thilak new year 2025 new car 2025

தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து வந்த ரமேஷ் திலக்கிற்கு குட் நைட், டிமான்ட்டி காலனி உள்ளிட்ட படங்கள் நடிப்பதற்கான பெரியளவு ஸ்பேஸை அவருக்கு பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டும் புது காரும்: நடிகர் ரமேஷ் திலக்கின் சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜே நவலக்‌ஷ்மியை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை பலரும் பலவிதமாக கொண்டாடி வரும் நிலையில், புது கார் வாங்கி தனது குடும்பத்துடன் டிரைவ் பண்ணி கொண்டாடியுள்ளார் ரமேஷ் திலக்.

மனைவி, மகன் செம ஹேப்பி: டொயோட்டோ கார் ஒன்றை புதிதாக புத்தாண்டுக்கு ரமேஷ் திலக் வாங்கிய நிலையில், அவரது மனைவியும் மகனும் செம ஹேப்பியாக உள்ளனர். குடும்பத்துடன் கார் ஷோரூமில் தனது மகன் கையில் அந்த பெரிய சாவி அட்டையை பிடித்துக் கொண்டு நிற்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு தனது நியூ இயர் சந்தோஷத்தை ஷேர் செய்திருக்கிறார் ரமேஷ் திலக்.

ramesh thilak new year 2025 new car 2025

நடிகைகள் வாழ்த்து: விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ மற்றும் நடிகை காயத்ரி சங்கர் உள்ளிட்ட நடிகைகள் கலக்குறீங்க ரமேஷ் திலக் வாழ்த்துகள் என கமெண்ட் போட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கடுமையாக பல ஆண்டுகள் சினிமாவில் உழைத்து சொந்தமாக கார் வாங்கியிருக்கும் ரமேஷ் திலக்கிற்கு ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு யாவரும் நல்லவரே, போட், பேட்ட ராப் மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார். இந்த ஆண்டும் இவருக்கு சில படங்கள் காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X