ஆணவத்தின் உச்சியில் இருக்காரு காளி வெங்கட்.. மெட்ராஸ் மேட்னி பட விழாவில் ரமேஷ் திலக் அதிரடி பேச்சு!
சென்னை: குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி என தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் ரமேஷ் திலக்கிற்கு தனியாக ஒரு ரசிகர் வட்டமே உருவாகி விட்டது. சூரியன் FMல் ஆர்ஜேவாக கலக்கிக் கொண்டிருந்த ரமேஷ் திலக் முகப்புத்தகம் எனும் குறும்படத்தில் நடித்து பிரபலமானார். மாப்பிள்ளை, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த இவர், சிவகார்த்திகேயனின் மெரினா படத்தின் மூலம் நடிகராக மாறினார்.
சூது கவ்வும், நேரம், வாயை மூடி பேசவும், டிமான்ட்டி காலனி, காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், வேதாளம், காதலும் கடந்து போகும், ஒரு நாள் கூத்து, கபாலி, ஆண்டவன் கட்டளை, காலா, டிக் டிக் டிக், மாஸ்டர், விக்ரம், குட் நைட், வேட்டையன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி என பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

ரமேஷ் திலக்கின் குரல் படங்களில் கேட்டாலே ஏதோ நல்ல சீன் வரப்போகிறது என்றும் நல்ல நகைச்சுவை இருக்கும் என்றும் ரசிகர்கள் எண்ண ஆரம்பித்துவிட்டனர். அவரும் அதை தொடர்ந்து கடைபிடித்தும் காப்பாற்றிக் கொண்டும் வருகிறார். காளி வெங்கட் ஹீரோவாக நடித்துள்ள 'மெட்ராஸ் மேட்டினி' பட விழாவில் பங்கேற்று பேசிய அவர், காளிவெங்கட் ஆணவத்தின் உச்சியில் இருக்காரு என பேசி ஒட்டுமொத்த அரங்கத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
காளி வெங்கட்டின் மெட்ராஸ் மேட்டினி: ரமேஷ் திலக் போல நடிகர் காளி வெங்கட்டும் தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி காமெடி நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் மாறிய நிலையில், அடுத்ததாக ஹீரோவாகவும் களமிறங்க காத்திருக்கிறார். கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியன் நடித்துள்ள மெட்ராஸ் மேட்டினி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அந்த படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற காளி வெங்கட்டின் நண்பர் ரமேஷ் திலக், காளி வெங்கட்டை வஞ்சப்புகழ்ச்சி அணியில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆணவத்தின் உச்சியில் இருக்காரு காளி வெங்கட்: சமீபத்தில் வெளியாகி 75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நல்ல போலீஸ் அதிகாரியாக நடித்து பலரது மனங்களை கவர்ந்த ரமேஷ் திலக், மேடையேறி பேசும் போது, கண்டிப்பாக மெட்ராஸ் மேட்டினி படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும். அதில், எந்தவொரு சந்தேகமும் இல்லை. அந்த படத்தை நான் பார்க்காமலே எப்படி சொல்கிறேன் என்றால், ஒரு சில படங்களை எடுத்து முடித்து விட்டு அந்த படத்தில் நடித்தவர்களின் ரியாக்ஷனை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம்.
நோபல் பரிசு தரவேண்டும்: பம்மிக் கொண்டே இருந்தால், படம் சரியாக வரவில்லை என்று முடிவு செய்துவிடலாம். ஆனால், காளி வெங்கட்டை கடந்த சில வாரங்களாக பார்க்கிறேன், ஆணவத்தின் உச்சியில் இருக்காரு, ஏதாவது கேட்டா, அப்படியே ஒரு கம்பீர தோரனையில் கெத்தாகவே பேசி வருகிறார். அதன் மூலமே இந்த படத்தின் மீது அவர் எந்தளவுக்கு வைத்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது என தனது பாணியிலேயே நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும், காளி வெங்கட்டுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றும் கோர்த்து விட்டு போய் விட்டார்.


Click it and Unblock the Notifications











