twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கே' கலாச்சாரத்தை எதிர்க்கிறேன் - பஞ்சாயத்தை இழுத்துவிட்ட ராம்கோபால் வர்மா!

    By Vignesh Selvaraj
    |

    ஐதராபாத் : சர்ச்சைகளுக்குப் பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா இப்போது ஒரு ஃபேஸ்புக் பதிவின் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

    நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் ராஜமௌலி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ராஜமௌலி படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்தப் புகைப்படத்தை ராம்கோபால் வர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து 'கே' கலாசாரத்துக்கு ப்ரொமோஷன் செய்பவர்களைக் கண்டிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ராம்கோபால் வர்மா

    ராம்கோபால் வர்மா

    தெலுங்கு இயக்குனரான ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தொடர்ந்து பதிவிடுபவர். சர்ச்சையான கருத்துகளால் ட்விட்டரை தெறிக்கவிட்ட அவர் இப்போது ட்விட்டரை விட்டு அவர் விலகினாலும், இன்னமும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    பாகுபலி படம்

    பாகுபலி படம்

    இரண்டு நாட்களுக்கு முன்பு 'பாகுபலி' இயக்குனர் ராஜமௌலி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ராஜமௌலி இயக்க உள்ள அடுத்த படத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்க உள்ளதாக அந்தப் புகைப்படம் பற்றிய செய்திகள் வருகின்றன.

    கே கலாச்சாரம்

    கே கலாச்சாரம்

    சர்ச்சைக்குரிய இயக்குனரான ராம் கோபால் வர்மா, தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த போட்டோவை பதிவிட்டு, 'பெண்களை மிகவும் வணங்குபவனாக இருப்பதால், 'கே' கலாச்சாரத்தை வளர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்' என ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

    ரசிகர்கள் கொந்தளிப்பு

    ரசிகர்கள் கொந்தளிப்பு

    இதற்கு தெலுங்கு திரையுலக ரசிகர்கள் அனைவரும், குறிப்பாக ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ராஜமௌலியின் ரசிகர்கள், ராம்கோபால் வர்மாவுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    RamGopal Varma is now in a new controversy with a Facebook post. Fans are angry because RamGopal Varma have shared a photograph of Rajamouli and captioned as 'Being an ardent worshipper of women I strongly condemn such blatent promotion of gay culture'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X