»   »  "என்ன இப்படி கிளம்பிட்டாரு..." ஆபாசப்பட நடிகை மியா மால்கோவா படத்தை இயக்கும் சர்ச்சை இயக்குநர்!

"என்ன இப்படி கிளம்பிட்டாரு..." ஆபாசப்பட நடிகை மியா மால்கோவா படத்தை இயக்கும் சர்ச்சை இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆபாசப் பட நடிகை மியா மால்கோவை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய ஒரு படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை : இயக்குநர் ராம்கோபால் வர்மா எப்போதும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர். அவ்வப்போது ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு ட்ரெண்டாகி விடுவார்.

சில மாதங்களாக ட்விட்டரை விட்டு விலகி இருந்த அவர் கடந்த வாரம் தான் மீண்டும் ட்விட்டருக்கு வந்தார்.

இப்போது, ஆபாசப் பட நடிகை மியா மால்கோவை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய ஒரு படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சர்ச்சை இயக்குநர்

சர்ச்சை இயக்குநர்

ராம்கோபால் வர்மா எப்போதும் சர்ச்சைகளுடனே பயணிப்பவர். படம் எடுத்தாலும், இல்லாவிட்டாலும் ஆல் டைம் ட்ரெண்டிங்கிலேயே இருப்பார். சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதால் இவருக்கு பரவலான எதிர்ப்பும் உண்டு.

ட்விட்டர் டைரக்டர்

ட்விட்டர் டைரக்டர்

ட்விட்டரில் நடிகைகளின் அரை நிர்வாண புகைப்படங்களையும், அநாகரிகமான கருத்துகளையும் பகிர்ந்து வந்ததால் பலர் இவரைத் திட்டி வந்தனர். பிறகு சில மாதங்கள் ட்விட்டரை விட்டுச் சென்றவர் மீண்டும் இப்போது வந்திருக்கிறார்.

பவன் கல்யாணை வம்பிழுத்த வர்மா

பவன் கல்யாணை வம்பிழுத்த வர்மா

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு தெரிவித்த ராம்கோபால் வர்மா, பவண் கல்யாணை வம்பிழுத்து ஒரு ட்வீட் போட்டு தனது வருகையை ரணகளமாகப் பதிவு செய்தார். இவர் மீண்டும் ட்விட்டருக்கு வந்திருப்பதால் என்டர்டெயின்மென்டுக்கு கியாரண்டி எனக் கூறி வருகின்றனர்.

யாரையும் விட்டுவைப்பதில்லை

யாரையும் விட்டுவைப்பதில்லை

ட்விட்டரில் இல்லாத சமயத்தில் ஃபேஸ்புக்கிலும் சர்ச்சையைக் கிளப்பி பதிவுகள் செய்திருந்தார் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம்சரணும் இயக்குநர் ராஜமௌலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு 'Gay' வா? எனக் கூறிப்பிட்டிருந்தார் வர்மா.

ஆபாச குறும்படம்

ஆபாச குறும்படம்

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல ஆபாசப் பட நடிகையான மியா மால்கோவா நடிக்கும் ஒரு குறும்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். அந்தக் குறும்படத்திற்கு 'GOD, SEX and TRUTH' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மியா மால்கோவா

மியா மால்கோவா

அந்தப் படத்தின் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட மியா மால்கோவா, "சன்னி லியோனுக்கு பிறகு இரண்டாவது ஆபாசப் பட நடிகையாக இந்திய இயக்குநரின் படத்தில் நடிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த போஸ்டரில் நிர்வாணமாக காட்சியளிக்கிறார் மியா மால்கோவா. ராம்கோபால் வர்மா ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளனர்.

English summary
Director Ramgopal Varma has always put controversial posts on Twitter. He left Twitter for months, and last week he returned to Twitter. Now, the poster of a film directed by Ram Gopal Varma with porn actress Mia Malkova has been released. Mia Malkova is naked in this 'God, Sex and Truth' film poster.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X