ராஜமௌலியை கேலி செய்து ட்விட்..ராம்கோபாலை திட்டிட்தீர்த்த ரசிகர்கள் !

ஹைதராபாத் : ராஜமௌலியை மீண்டும் வம்புக்கு இழுத்தும் கேலி செய்தும் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Bahubali Director SS Rajamouli tested positive | Health status

சில நாட்களுக்கு முன்பு பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அமிதாப்பச்சன் குடும்பத்தாரை கொரானா வைரஸ் தாக்கியது பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொரானா நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக தரத்தில்

உலக தரத்தில்

தனது படங்களின் மூலம் தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் ஒரு சில இந்திய இயக்குனர்களில் முன்னணி பட்டியலில் இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. பிரம்மாண்ட படங்களையும், சரித்திரப் படங்களையும் எடுத்து ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சவால்விடும் வகையில் திரைக்கதைகளை அமைத்து இந்திய திரைப்படங்களை உலக தரத்தில் மிளிரச் செய்துள்ளார்.

உலகையே திரும்பிப் பார்க்க

உலகையே திரும்பிப் பார்க்க

அவ்வாறு இவர் இயக்கிய மகதீரா, பாகுபலி பாகம் 1 மற்றும் 2 போன்ற திரைப்படங்கள் இந்திய மக்களால் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை சேர்ந்த பல்வேறு மக்களும் ரசித்து இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில், வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூலை வாரி குவித்து இந்திய படங்கள் இதுவரை செய்திருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கொரானா நோய்

கொரானா நோய்

இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வரும் வேளையில் தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் "ஆர் ஆர் ஆர்" படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது பரவி வரும் கொரானா நோய் பரவலின் காரணமாக அதன் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகினர் பலரும் அதிர்ச்சியில்

திரையுலகினர் பலரும் அதிர்ச்சியில்

இந்நிலையில் படப்பிடிப்புகள் தொடங்க இன்னும் சில மாத காலம் ஆகும் என்ற நிலை இருந்து வருவதால் வீட்டில் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி கொண்டிருந்த ராஜமௌலிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொரானா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்ததை தொடர்ந்து திரையுலகினர் பலரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ராஜமௌலியை சீண்டி

ராஜமௌலியை சீண்டி

ராஜமௌலியின் ரசிகர்களும் நண்பர்களும் நீங்கள் விரைவிலேயே கொரானாவில் இருந்து மீண்டு வந்துவிடுவீர்கள் என நம்பிக்கையூட்டும் வகையில் கூறிவரும் நிலையில், தற்போது தொடர்ந்து சர்ச்சை படங்களை இயக்கி இந்திய அளவில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் இயக்குனர் ராம் கோபால் வர்மா ராஜமௌலியை சீண்டி டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

ராஜமௌலியை கேலி செய்து

ராஜமௌலியை கேலி செய்து

அதில் "உங்களை தொற்றியுள்ள கொரானா நோயை அழிக்க நீங்கள் உருவாக்கிய பாகுபலி வீரர்களை கூப்பிடுங்கள்" என கேலியாக பதிவிட்டுவிட்டு பின் "நகைச்சுவையாக கூறினேன், எனக்கு கட்டாயம் தெரியும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இந்தக் கொடிய நோய் தொற்றிலிருந்து மிக விரைவிலேயே மீண்டும் வருவீர்கள்" என நான் நம்புகிறேன் என பதிவிட்டு இருந்தார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியவாறு உள்ள இந்த ட்வீட் பதிவிற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் கடுப்பாக ராம்கோபால் வர்மாவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X