RRR படத்தை மோசமாக விமர்சித்த ஆந்திர பிரபலம்…அவரை கலாய்த்த ராம்கோபால் வர்மா.

கடந்த மாதம் RRR திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வசூலை வாரி குவித்தது.

RRR படம் மக்களிடைய ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டதாகவே சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் சில நெகட்டிவ் கருத்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் ஆந்திராவில் பிரபலமான ஒரு மத போதகர் RRR படம் பற்றி மிக மோசமாக சாடியுள்ளார். அந்த மத போதகர் கருத்தை கிண்டல் செய்யும் விதமாக ராம்கோபால் வர்மா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

K A Paul

K A Paul

K A Paul ஒரு மத போதகர் ஆவார். அமெரிக்காவில் வசித்து வரும் இவர் அமெரிக்காவின் அமைதிக்கான தூதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியா வரும்போது ஐதராபாத்தில் தங்கி கொள்பவர். அரசியல் ஈடுபாடு கொண்ட இவர் 2008 ஆம் ஆண்டு பிரஜா சாந்தி பார்ட்டி எனும் அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு அவரது கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. இவர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருபவர்.

டேஞ்சரஸ் ராம்கோபால் வர்மா

டேஞ்சரஸ் ராம்கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிகைகள் அப்சரா ராணி மற்றும் நைன கங்குலி நடிக்கும் படம் டேஞ்சரஸ். டேஞ்சரஸ் படம் இந்தியாவின் முதல் லெஸ்பியன் கிரைம் ஆக்சன் படம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் சில படங்கள் லெஸ்பியன் அடிப்படையில் எடுக்கப்பட்டாலும் இந்த படம் முழுக்க முழுக்க அதை மையப்படுத்திய உருவாக்கப்பட்ட படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீரியும் பாம்பும் ஆக

கீரியும் பாம்பும் ஆக

ஆந்திராவில் சர்ச்சை பேச்சுகளை பேசுபவர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இதற்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்ட அவர். சினிமா அரசியல் நடிகர்கள் என எதையும் விட்டு வைக்காத மனிதர். ராம்கோபால் வர்மாவிற்கு எதற்கும் சளைக்காதவர் KA Paul. இதற்கு முன் பல விவாத நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டது ஆந்திர மக்களிடம் பிரபலம். ராம்கோபால் வர்மா அவரை கிண்டல் செய்வதும் அவர் ராம் கோபால் வர்மாவை சாடுவதும் மிக இயல்பாக நடந்தேறும் ஒரு நிகழ்ச்சி.

RRR படத்தை விமர்சித்த KA Paul.

RRR படத்தை விமர்சித்த KA Paul.

KA Paul பொதுமக்களுடன் Live வில் உரையாடிக் கொண்டு இருக்கும் போது ஒரு நேயரின் கேள்விக்கு பதிலாக RRR திரைப்படமா அப்படி ஒரு படத்தை நான் கேள்விப்பட்டதில்லை. படங்களைப் பார்த்து ஏன் வீணாக போகிறீர்கள். வேறு நல்ல செயல்களை செய்யுங்கள். சமூகத்திற்கு நல்லது செய்யும் திரைப்படங்களை மட்டும் பாருங்கள். RRR போன்ற சமூகத்திற்கு பயன் இல்லாத படங்களை பார்த்து உங்களுக்கு என்ன வரப்போகிறது என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா இவர் பேசிய வீடியோவை மேற்கொள் காட்டி " உன் முகர கட்டை " என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X