twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சை இயக்குனரின் 'பைரவா கீதா'... பர்ஸ்ட் லுக்கே மிரட்டுதே!

    பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.

    |

    Recommended Video

    தமிழிலும் ரிலீசாகிறது ராம்கோபால் வர்மாவின் பைரவா கீதா- வீடியோ

    சென்னை: நான்கு மொழிகளில் உருவாகியிருக்கும் ராம்கோபால் வர்மாவின் 'பைரவா கீதா' இம்மாதம் 26ம் தேதி ரிலீசாகிறது.

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.

    Ramgopal Varmas Bhairavaa Geetha to release on October 26

    இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் புதுமுகங்கள் தனஞ்ஜெயா நாயகனாகவும், ஈரா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார்.

    Ramgopal Varmas Bhairavaa Geetha to release on October 26

    சாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கிறது 'பைரவா கீதா'. ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

    [நான் பேராசை பிடித்தவள்: உண்மையை சொன்ன பிரேமம் நடிகை]

    Ramgopal Varmas Bhairavaa Geetha to release on October 26

    இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Ramgopal Varmas Bhairavaa Geetha to release on October 26

    ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் 'பைரவா கீதா 'அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Director Ram Gopal Varma's Bhairavaa Geetha, whose trailer, teaser and songs have created a sensation on the Internet, is likely to hit screens on October 26.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X