டீச்சர்- மாணவன் பாலியல் படம்... ஸ்ரீதேவி பெயரை மாற்ற முடியாது..!- ராம் கோபால் வர்மா அடம்
பள்ளி ஆசிரியை - மாணவன் இடையிலான உறவை பாலின ரீதியாகச் சித்தரித்து தாம் உருவாக்கி வரும் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி என்ற பெயரை மாற்ற முடியாது என இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா தான் இயக்கும் படத்துக்கு ஸ்ரீதேவி என்று பெயரிட்டுள்ளார். முன்னதாக சாவித்ரி என்று தலைப்பிட்டிருந்தார். திடீரென ஸ்ரீதேவி என்று பெயர் மாற்றிவிட்டார்.

வக்கிரம்
இந்நிலையில், இந்தத் தெலுங்குப் படத்தின் சில காட்சிகளை தனது பேஸ்புக் வலைத்தளத்திலும் இணையதளங்களிலும் வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. இந்தக் காட்சிகளைக் கண்ட சிலர் முகம் சுளித்தனர். வளர் இளம் சிறுவன் ஒருவன், வயதில் மூத்த பெண்மணி ஒருவரைக் கண்டு பாலின ரீதியாகக் கவர்ந்திழுக்கப் படுவது போல புகைப்படங்கள் இருந்தன. இதனை அவர் வெளியிட்ட படக் காட்சிகள் வெளிப்படுத்தின.

எதிர்ப்பு
இந்நிலையில் ஸ்ரீதேவி என்ற படத்தின் பெயரைக் கண்டு தனது மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கையைத்தான் ராம் கோபால் வர்மா படம் ஆக்குகிறாரோ என்று மக்கள் நினைப்பதாக, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நினைத்து, அவரும் ஸ்ரீதேவியும் இணைந்து சட்டப்பூர்வமான நோட்டீசை ராம் கோபால் வர்மாவுக்கு அனுப்பி வைத்தனர்.

விளக்கம்
ஆனால், அவர்கள் அனுப்பிய நோட்டீஸ் குறித்து தம் பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
தாம் கல்லூரிப் பருவத்தில் ஸ்ரீதேவியின் மீது கொண்ட ஈர்ப்பு கொண்டிருந்ததாகவும், இதனை அண்மைக்காலமாக வெளிப்படையாகவே பொது இடங்களில் சொல்லியுள்ளதாகவும், ஆனால் இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் அதற்கும் பெரிய இடைவெளி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அது ஸ்ரீதேவியோ நானோ அல்ல...
இந்த இரு கதாபாத்திரங்களும் தன்னையும் ஸ்ரீதேவியையும் ஒத்திருக்காது என்றும், அந்தச் சிறுவன் ஒரு இயக்குனராகவோ, அல்லது அந்தப் பெண்மணி ஒரு நடிகையாகவோ இந்தக் கதையில் வரவில்லை என்று கூறியுள்ளார்.

தூண்டி விட்டிருக்காங்க
மேலும், ஸ்ரீதேவியை யாரோ தூண்டிவிட்டுள்ளனர் என்றும், உள்நோக்கத்துடன் செயல்படும் அவர்களின் பேச்சைக் கேட்டு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் ஸ்ரீதேவியின் புகழுக்குக் களங்கம் வரும் வகையில் செயல்படமாட்டேன், அதை இந்தப் படம் எடுத்துக் காட்டும் என்றும் கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.


Click it and Unblock the Notifications











