"ஶ்ரீதேவி உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துகொள்வேன்" - பிரபல இயக்குநர் உருக்கமான பதிவு
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் இறப்புச் செய்தியை அவ்வளவு எளிதில் யாராலும் நம்ப முடியவில்லை. நாம் கேள்வி படுவது வதந்தியாக, கனவாக இருக்கக்கூடாதா என்று அவரது ரசிகர்கள் பலரும் ஏங்குகின்றனர்.
ஶ்ரீதேவியுடன் நடித்த நடிகர்கள், அவரை வைத்து படம் இயக்கியவர்கள், அவரது படங்களில் பணிபுரிந்தவர்கள் எனப் பலரும் ஶ்ரீதேவியின் இறப்புக்கு உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி மரணம் பற்றி ட்விட்டரில் உருக்கமான ட்வீட் போட்டிருக்கிறார்.

ராம்கோபால் வர்மா
ஶ்ரீதேவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து அவருடனான தனது பயணம் குறித்து ட்விட் செய்து வருகிறார் ராம்கோபால் வர்மா. ராம்கோபால் வர்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருப்பவர் ஶ்ரீதேவி.
ஏன் அவரை மட்டும் கொண்டுபோனாய்
பெருமாள் முன் ஸ்ரீதேவி மற்றும் ராம் கோபால் வர்மா நிற்பது போல ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, "பாலாஜி, அவரை மட்டும் ஏன் கொண்டு போனாய் என்னை இங்கே விட்டுவிட்டு" என பதிவு செய்துள்ளார்.
சிறந்த பாடல்
"எனது முழு சினிமா பயணத்திலும் நான் ஷூட் செய்த சிறப்பான பாடல் இதுதான். கீரவாணியின் ஒவ்வொரு நுணுக்கமான இசைக்கும் வாழ்க்கையையே கொண்டுவந்தார் ஶ்ரீதேவி. பாடலின் முழு கொரியோகிராஃபியும் அவரது முகபாவங்கள் தான்."
கடைசி ட்வீட் இதுதான்
"ஶ்ரீதேவியை பற்றிய எனது கடைசி ட்வீட் இதுதான். இப்போதிலிருந்து அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என கற்பனை செய்து கொள்வேன். ஶ்ரீதேவி காரு, நான் உங்களை நிறைய சிரிக்க வைத்த பின்னரும், நீங்கள் என்னை இவ்வளவு அழ வைக்கிறீர்கள். நான் உங்களுடன் இனிமேல் பேசமாட்டேன்"


Click it and Unblock the Notifications











