'ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வேன்' - சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா அதிரடி!

By Vignesh Selvaraj

ஐதராபாத் : சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீபத்தில் 'God sex and truth' என்ற ஒரு படம் இயக்கி தயாரித்தார்.

இந்தப் படத்தில் பிரபல ஆபாசப் பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு எழுந்த பலத்த எதிர்ப்பால் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொய்யான செய்தி வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் ரஜினிகாந்த் என்பவர் மீதும் வழக்கு தொடர்வேன் எனக் கூறியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் 'God sex and truth' படம் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி தெலுங்கானா மாநிலத்தில் பல பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் படம் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராம்கோபால் வர்மா பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

போராட்டம் நடத்திய பெண்கள் இதனால் பெண்களின் போராட்டம் இன்னும் வலுவடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 40 காவல் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ராம்கோபால் வர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொபைல், லேப்டாப் பறிமுதல்

மொபைல், லேப்டாப் பறிமுதல்

ராம்கோபால் வர்மாவிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடமிருந்த மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ராம்கோபால் வர்மாக கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி

இதுஒருபுறமிருக்க இந்த சர்ச்சை பற்றி ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி ராம் கோபால் மீது அவதூறாக பேசியுள்ளது. அந்தப் படத்தை அவர் இயக்கியதையே போலீஸ் விசாரணையில் மறுத்துவிட்டதாக TV9 சேனலில் செய்தி வெளியானது.

ரஜினிகாந்த் மீது அவதூறு வழக்கு

இதனால், அந்த டிவி-யைச் சேர்ந்த ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரவுள்ளதாக தற்போது இயக்குனர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார். விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது அது பற்றிய தகவல்களை வெளியே கசியவிடுதல் குற்றம் எனக் கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.

பிஜேபி பிரமுகர் மீதும் வழக்கு

பிஜேபி யை சேர்ந்த டும்மால்பள்ளி பத்மா மீதும் புகார் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவர். பத்மா பேசிய விதத்தைப் பாருங்கள் என ஒரு அந்த டிவி நிகழ்ச்சியின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X