தலைவர்களை இப்படியா அசிங்கப்படுத்துவது.. பிரபல இயக்குநரின் படத்திற்கு நீதிமன்றம் தடை!

ஹைதராபாத்: ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அஜ்மல் நடித்துள்ள வியூகம் திரைப்படத்திற்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ராம்கோபால் வர்மா, எப்போதும் எக்குத்தப்பான கருத்தை பதிவிடுவது மட்டுமில்ல மனதில் பட்டதை பேசுகிறேன் என்று எததையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை பல ஆண்டுகளாகவே வாடிக்கையாக வைத்து இருக்கிறார். நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பலர் நமக்கு எதுக்குப்பா வம்பு என்று ஒதுங்கி சென்றுவிடுவார்கள்.

Ramgopal varmas Vyuham movie Telangana High Court banned

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, நாகார்ஜூனாவை வைத்து சிவா என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படத்தை வெளியிட்டார் அங்கேயும் படம் பட்டையை கிளப்பியது.

மாஸ் இயக்குநர்:அடுத்தடுத்து வெற்றியை கொடுத்த ராம்கோபால் வர்மா, ஸ்ரீ தேவியை வைத்து க்ஷானா க்ஷானம் என்ற படத்தை இயக்கி புகழின் உச்சிக்கு சென்றார். இதை தொடர்ந்து ரங்கீலா, பிரேம கதா, சத்யா என வெற்றிப்படங்களை கொடுத்தார். தமிழில் பிரசாத்தை வைத்து திருடா திருடா படத்தை இயக்கினார். பல வெற்றிப்படங்களை எடுத்து பெயர் எடுத்த இயக்குநர் ராம்கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளாக விவகாரமான படங்களை எடுத்து வருகிறார்.

விவகாரமான தடை: அண்மையில் இரண்டு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் கதைக்களத்தை கொண்ட டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் அப்ஸரா ராணி, நைனா கங்குலி இருவரும் படுமோசமாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ப்ரோமோஷனுக்கு ஊர் ஊராக சென்ற ராம்கோபால் வர்மா, படத்தை விளம்பர படுத்துகிறேன் என்று ஆஷு ரெட்டியின் காலடியில் அமர்ந்து கொண்டு, அவரின் காலை வருடி, ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் கொடுத்து ஒட்டுமொத்த திரைத்துறையும் முகம்சுளிக்க வைத்துவிட்டார். அந்த அளவிற்கு ராம்கோபால் வர்மா எது செய்தாலும் அதில் சர்ச்சை நிச்சயம் இருக்கும்

Ramgopal varmas Vyuham movie Telangana High Court banned

சர்ச்சைக்குரிய காட்சிகள்: தற்போது இவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் வியூகம். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துத்துள்ளார். இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இவர்கள் இருவரை யும் இழிவுபடுத்தும் விதமாக படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அண்மையில் படத்தின் போஸ்டர் வெளியானது அதில் இருவரையும் இழிவுப்படுத்தும் வகையில் இருந்ததால்,தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வியூகம் படத்தின் போஸ்டரை தீ வைத்துத்எரித்தனர். அதுமட்டுமில்லாமல், பிலிம் நகரில் உள்ள ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்கட்களை சேதப்படுத்தினர்.

நீதிமன்றம் தடை: இதையடுத்து வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபா பு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் தெலுங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 11ந் தேதி வரை வியூகம் படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X