குழந்தைகள் முன் வெற்றி பெறுவதற்காக போராடுகிற அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும்.. ’பறந்து போ’ டிரைலர்!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மிதுல் ரயான் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்ற நிலையில், யூடியூபில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பொதுவாகவே இயக்குநர் ராம் இயக்கும் படங்கள் எல்லாமே ரசிகர்களை ஏதோ செய்து உலுக்கி எடுத்துவிடும். அந்தளவுக்கு சாதாரண மனிதர்களின் அசாதாரண உணர்வுகளுடன் விளையாடி திரையில் காவியங்களை படைத்து விடுவார்.

Ram s Paranthu Po movie trailer out now with Great Parenting message
Photo Credit:

மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளியான பேரன்பு படத்தைத் தொடர்ந்து மீண்டும் மலையாள நடிகரான நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை படத்தை இயக்கியிருந்தார். சர்வதேச விருது விழாக்களில் எல்லாம் அந்த படம் திரையிடப்பட்ட நிலையில், இன்னமும் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வைக்கு வெளியாகவில்லை.

பறந்து போ ரிலீஸ் தேதி: வரும் ஜூலை 4ம் தேதி ராம் இயக்கியுள்ள பறந்து போ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்துள்ள நிலையிலும், தியேட்டர் ரிலீசுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ராம் இயக்கிய படம் இவ்வளவு குறுகிய காலத்தில் தியேட்டருக்கு வருவதே பெரிய விஷயம் என ரசிகர்கள் கூறுகின்றனர். இன்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்று டிரைலரை வெளியிட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு படம் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கையை டிரைலர் விதைத்திருக்கிறது.

டிரைலர் எப்படி இருக்கு: ஆயுத கலாச்சாரம், லிட்டர் கணக்கில் ரத்தங்களை வைத்துக் கொண்டும் ஆபாச காட்சிகளுடன் படங்கள் வெளியாகி வரும் நிலையில், அவையெல்லாம் இல்லாமல், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரயான் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ டிரைலரில் இன்றைய காலத்து பிள்ளைகளை வளர்க்கவும் அவர்கள் முன்பு தாங்கள் வெற்றிப் பெற்றவர்களாக காட்ட எந்தளவுக்கு போராடுகின்றனர் என்பதை டிரைலரில் காட்டிய விதத்திலேயே டிரைலர் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது.

குழந்தை வளர்ப்புக்கு முக்கியத்துவம்: சர்வதேச படங்களுக்கு நிகராக தனது சினிமாக்களை கொடுத்து வரும் ராம் மிர்ச்சி சிவாவை வைத்து இப்படியொரு படத்தை இயக்கியுள்ளார். அதுவும் குழந்தைகளை கவரும் விதமாக இந்த படம் அமையும் என்றும் குழந்தை வளர்ப்பு எந்தளவுக்கு முக்கியம் என்றும் பெற்றோர்கள் சில விஷயங்களை வேண்டுமென்றே திணிப்பது மற்றும் குழந்தைகள் முன்னிலையில், தங்களை சூப்பர் ஹீரோக்கள் போல காட்ட முயற்சிப்பது உள்ளிட்டவை எல்லாம் தேவையில்லாத ஆணி என அடித்து நொறுக்கும் கருத்துள்ள படமாக ராமின் பறந்து போ படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி: வரும் ஜூலை 4ம் தேதி தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் வீழான், சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத் நடித்துள்ள இன்னொரு ஃபீல் குட் படமான 3பிஎச்கே படங்களுடன் ராமின் பறந்து போ படமும் போட்டியாக வெளியாகும் நிலையில், தியேட்டர்கள் பெரிய அளவில் ஒதுக்கப்படுமா? போன்ற சந்தேகங்களும் எந்த படம் அடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் போல வெற்றி அடையும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X