Divya Spandana Net worth: பொல்லாதவன் ரம்யாவுக்கு 41 வயசு.. எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?
சென்னை: கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக அபி எனும் படத்தில் 2003ம் ஆண்டு அறிமுகமானவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிம்புவுடன் குத்து, தனுஷ் உடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வரும் திவ்ய ஸ்பந்தனா தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.

சமீபத்தில், திவ்யா ஸ்பந்தனா குறித்த மோசமான வதந்தி வெளியாகி பகீர் கிளப்பிய நிலையில், அதெல்லாம் பொய் என அதிரடியாக அறிவித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய ரம்யா இன்று தனது 41வது பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விபரங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
குத்து பட ஹீரோயின்: 2003ம் ஆண்டு கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமான உடனே சும்மா லட்டு மாதிரி இருக்காரு ரம்யா என நடிகர் சிம்புவின் குத்து படத்திற்காக அவரை ஹீரோயினாக கோலிவுட்டுக்கு கொண்டு வந்தார் அந்த படத்தின் இயக்குநர் ஏ. வெங்கடேஷ். அந்த படத்தைத் தொடர்ந்து அர்ஜுன் நடித்த கிரி படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் ரம்யா. அதன் பின்னர் தனது பெயரை திவ்யா ஸ்பந்தனா என்றும் அவர் மாற்றிக் கொண்டார்.
பொல்லாதவன் தந்த வெற்றி: சிம்புவுடன் அவர் நடித்த குத்து படம் கூட அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் தான் தமிழில் ரம்யாவுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக இன்றளவும் உள்ளது. அதன் பின்னர் தூண்டில், சிங்கம் புலி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தின் அனல்மேல் பனித்துளி பாடல் ரசிகர்கள் மத்தியில் ரம்யாவை நெருக்கமாக்கியது.
41வது பிறந்தநாள்: 1982ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பெங்களூருவில் பிறந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். உத்தரகாண்டா எனும் படத்தில் நடித்து வரும் இவர் இதுவரை சுமார் 40 படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தை தயாரித்தும் உள்ளார்.
சொத்து மதிப்பு: பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், டாப் ஹீரோயினாக திவ்யா ஸ்பந்தனா ஒரு போதும் வலம் வரவில்லை. மேலும், அரசியலிலும் களமிறங்கிய அவர் அதிகளவில் செலவு செய்த நிலையில், தற்போது 3 முதல் 4 கோடி வரை தான் அவரிடம் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











