கார்னர் பண்றாங்க.. கதறிய சுரேஷ், வேல்முருகன்.. மொக்கை ஜோக் சொல்லி கலாய்த்த ரம்யா.. கமலும் விடல!

சென்னை: கார்னர் பண்றாங்க சார் என சுரேஷ் சக்கரவர்த்தியும் வேல்முருகனும் கதறுவதற்கு முன்பாகவே அவர்களை கமல் கார்னர் பண்ணி கார்னர் சீட்டில் உட்கார வைத்து கலக்கி விட்டார்.

சீரியஸா சுரேஷ் தாத்தா பேசிட்டு இருக்கும் போது, மொக்கை ஜோக் சொல்லி ரம்யா பாண்டியன் ஓவரா கலாய்ச்சிட்டாங்க..

கமலும், சுரேஷின் புலம்பலை விடுத்து வேல்முருகன் பஞ்சாயத்து பக்கம் போயிட்டார்.

கார்னர் பண்றாங்க சார்

கார்னர் பண்றாங்க சார்

பிக் பாஸ் போட்டியாளர்களை கதி கலங்க விட்டுக் கொண்டிருந்த நம்ம மொட்டை தாத்தாவை, ஒரு போடு போட்டதற்காக, அர்ச்சனா, பாலா சேர்ந்துகிட்டு பண்ண அர்ச்சனைனால கன்ஃபெஷன் ரூமில் கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டார் அந்த பெரிய மனுஷன். இப்போ தன்னை எல்லோரும் கார்னர் பண்றாங்கன்னு கமல் சாரிடமே கம்ப்ளைண்ட் பண்றார்.

பஞ்சாயத்து பண்ண விடல

பஞ்சாயத்து பண்ண விடல

சனிக்கிழமை எபிசோடிலே சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி சண்டையை பைசல் பண்ணி வைத்து விடலாம் என வந்த கமலை, பஞ்சாயத்தே பண்ண விடாமல், எல்லாத்துக்கும் நான் தான் காரணம், பெரிய தப்புப் பண்ணிட்டேன். மன்னிப்பு கேட்க வேண்டாம் என பேசிவிட்டு இன்னைக்கு மறுபடியும் கார்னர் பண்றாங்க சாருன்னு சொன்னா, கமலும் கார்னர் சீட்ல தான் உட்கார வைப்பார்.

அதே டிரெஸ்

அதே டிரெஸ்

வேல்முருகனுக்கு கருப்பு சட்டை, வெள்ளை வேட்டி கொடுத்து விட்டு பொது வெளியில் போட்டுடைத்து சுரேஷ் சக்கரவர்த்தி அசிங்கப்படுத்திய நிலையில், இன்னைக்கும் இருவரும் ஜோடி போட்டு அதே டிரெஸ் அணிந்து பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து இருக்காங்க, அட வெக்கங்கெட்டவைங்களா என வேல்முருகனை பார்த்து நெட்டிசன்கள் துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

மொக்கை ஜோக் ரம்யா

மொக்கை ஜோக் ரம்யா

முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளம் அடிப்பது போல, முடிஞ்சு போன பஞ்சாயத்தை வச்சு தன்னை கார்னர் பண்றாங்க மை லார்ட் என கமல் கிட்ட சுரேஷ் தாத்தா எவ்ளோ ஃபீல் பண்ணி பேசுறாரு, அப்பப்போய் அப்படியொரு மொக்கை ஜோக்கை சொல்றீங்களே, கொஞ்சமாச்சும் உங்களுக்கு அறிவு இருக்கா ரம்யா.

என்ன ஜோக் தெரியுமா?

என்ன ஜோக் தெரியுமா?

கார்னர் பண்றாங்கன்னு சொல்லிட்டு, எல்லாரையும் விட நான் ரொம்ப மேல் இருந்து வாட்ச் பண்றேன் என சுரேஷ் தாத்தா வசனம் பேசும் போது, நீங்க நிஜமாவே Male தான் என ரம்யா பாண்டியன் ஒரு மொக்கை ஜோக் சொல்லி அவரை அப்படியே ஆஃப் பண்ணிட்டாங்க, கமல் என்னன்னு கேட்கும் போது, அது மொக்கை ஜோக் சார் வேண்டாம் என ரம்யாவே சொன்ன பிறகு, சுரேஷை விட்டுவிட்டு, வேல்முருகன் பக்கம் வந்துட்டார் கமல்.

கமலும் விடல

கமலும் விடல

எல்லாத்தையும் கேட்டுட்டு கேட்காதவர் போல நடிப்பது உலகநாயகனுக்கு ஒன்று புதிதல்ல, ரம்யா மொட்டை தாத்தாவுக்கு ஒரு மொக்கை ஜோக் சொல்லி கலாய்த்த நிலையில், வேல்முருகன், பாலாஜி பிரச்சனையை கமல் ஒரு பழைய ஜோக் சொல்லி தீர்த்து வைத்தார். தமிழர் ஒருத்தர் சைக்கிளை தள்ளிட்டுப் போய்கிட்டு இருக்கும் போது வேட்டி அவுந்துடுச்சு, எதிர்ல ஒரு வெள்ளைக்காரன் வரான் ஒரே வார்த்தையில சைக்கிளை பிடிக்க சொல்லணும் என்ன சொல்வார் என கமல் ஆரம்பித்தார்.

ஆர்பரித்த அர்ச்சனா

ஆர்பரித்த அர்ச்சனா

என்ன ஜோக் என்றே புரியாமல் ஹவுஸ்மேட்ஸ் இருக்கும் போது, சுரேஷ் சாருக்கு தெரியும் என கமல் சொன்னார். ஆனால், அவரும் புரியாமல் முழித்த நிலையில், அர்ச்சனா அக்கா மட்டும் "ஐ.. எனக்குத் தெரியும்.." என்பது போல கையை வித்தியாசமாக அசைத்து ஆர்பரித்தார். கமல் உடனே இதுலயும் நமக்கு போட்டியா இருக்காரேன்னு அவங்கள அடக்கி வாசிக்க சொல்லிட்டு, என்சைக்கிளபிடியா எனக் கூற, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X