பாலாவை அடித்த ரம்யா.. ஷிவானிக்கு இன்னாம்மா கோபம் வருது.. சந்துல சிந்து பாடிய ஆஜீத்.. நடத்துங்க!

சென்னை: பாலாஜி முருகதாஸ் மன்னிப்பு கேட்டு அமர்ந்த பிறகு அவரது தப்புக்களை ரம்யா பாண்டியன் சுட்டிக் காட்ட பக்கத்தில் இருந்த ஷிவானிக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

சந்தடி சாக்கில் உள்ளே புகுந்து ரம்யாவுக்கு பதில் விளக்கம் கொடுத்த ஆஜீத்தை பார்த்து பாலா பாராட்ட, உடனே அருகில் இருந்த தலையணையை கொண்டு பாலாவை ரம்யா தாக்கினார்.

எல்லாத்துக்கும் ஆப்பு வச்சிட்டீயே பாலா என்றும் திட்டித் தீர்த்தார் ரம்யா.

அர்ச்சனா பேசிய டீலிங்

அர்ச்சனா பேசிய டீலிங்

ரம்யா, சோமசேகர் மற்றும் கேபி டீம் திருட்டு டாஸ்க்கை கச்சிதமாக செய்தது. நிஷா, ரியோ, சம்யுக்தா, அனிதா எல்லோரும் பாட்டி அர்ச்சனாவை சந்தோஷப்படுத்தியது என கிட்டத்தட்ட 70 சதவீத டாஸ்க் சரியாக பண்ணோம் பிக் பஸ், 30 சதவீத லக்சரி பட்ஜெட்டை குறைத்துக் கொண்டு மீதியையாவது கொடுங்களே என நல்லாவே டீலிங் பேசினார்.

யாருமே சரியா விளையாடல

யாருமே சரியா விளையாடல

அர்ச்சனா அக்கா பாலா மட்டுமே சரியாக விளையாடவில்லை என சொல்லாமல், எல்லாருமே நல்லா விளையாடினாங்க என்றார். ஆரியும் அதை வழி மொழிந்தார். ஆனால், எல்லா தப்பையும் பண்ணிட்டு, யாருமே கேமை சரியா விளையாடல, யாருக்கும் கேம் புரியல என பிக் பாஸை மீண்டும் பாலா டென்ஷன் ஆக்கினார்.

புரியவைக்க முயன்ற பாலா

புரியவைக்க முயன்ற பாலா

அதுதான் பாலா டாஸ்க் பேரே பாட்டி சொல்லைத் தட்டாதே, பாட்டியைத் தான் எல்லோரும் சந்தோஷப்படுத்தணும். நாங்க தான் திருடங்க, உங்களுக்கு கன்ஃபெஷன் ரூமில் என்ன சொன்னாங்களோ அதை மட்டும் செய்ய வேண்டியது தானே என பாலா திருடியது தப்பு என நாசுக்காக உணர்த்த முயற்சி செய்தார் ரம்யா.

ஷிவானி மூஞ்சியை பார்க்கணுமே

ஷிவானி மூஞ்சியை பார்க்கணுமே

பாலா பத்தி ரம்யா குற்றங்களாக அடுக்கி அடுக்கி சொல்லும் போது, தேவையில்லாமல் மிக்சர் தின்னி ஷிவானி இடையே வந்து சண்டை போடுவது போல பாலாவுக்கு பதில் பேசினார். ரம்யா கேபி இல்லை என்பதால், ஷிவானியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தொடர்ந்து பாலாவை ரோஸ்ட் செய்தார்.

சந்தில் சிந்து பாடிய சூப்பர் சிங்கர்

சந்தில் சிந்து பாடிய சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கரான ஆஜித், ரம்யா பாலா பற்றி பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டு இருந்த நிலையில், பாலாவுக்கு நச்சுன்னு புரியும் படி, நாம எல்லாரும் பாட்டியை சந்தோஷப்படுத்தணும், ரம்யா டீம் மட்டும் திருடுவாங்கன்னு சொன்னதும், இது எப்படி புரியுது, நீ இவ்ளோ நேரம் சொன்னது எதுவுமே என் மர மண்டைக்கு ஏறலையே என்பது போல பாலா பேசினார்.

பாலாவை அடித்த ரம்யா

பாலாவை அடித்த ரம்யா

ஆஜீத்தின் பேச்சைக் கேட்டு பாலா தன்னை டீஸ் பண்ணியதை புரிந்து கொண்ட ரம்யா, அருகே இருந்த தலையணையை கொண்டு பாலாவை அடித்தார். ஷிவானிக்கு என்ன பேசுறதுன்னே தெரியல, அப்படியே மூஞ்சியெல்லாம் சிவந்து போகுது. லக்சரி பட்ஜெட்டை காலி பண்ணிட்டு பேச்சா பேசுற என ரம்யா பாலாவை சுமூகமாகவே வெளுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X