உங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் குரூப்பிஸம் குறித்து பேச முயற்சித்த ரியோவுக்கு ரிவிட் வைத்தார் ரம்யா பாண்டியன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் குறைந்தது ஒரு சண்டையாவது நடப்பது வாடிக்கையாகி விட்டது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஒரு சில நாட்கள் அமைதியாக காமெடி பண்ணிக்கொண்டிருந்த ரியோ, கொஞ்சம் கொஞ்சமாக தனது முகத்திரையை விலக்கி வருகிறார்.

வசமாக சிக்கிய ரியோ
அந்த வகையில் இன்று குரூப்பிசம் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணுவதாக நினைத்து வசமாக ரம்யா பாண்டியனிடம் சிக்கினார் ரியோ. பட்டி மன்றத்தில் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்களே தவிர ஒரே குடும்பமாய் இல்லை என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி.

இன்ட்ரெஸ்ட் காட்டவில்லை
அதனை பிடித்துக் கொண்ட பிக்பாஸ் வீட்டின் கேப்டனான ரியோ, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ்களை டைனிங் டேபிளுக்கு அழைத்தார். ஆனால் யாரும் இன்ட்ரெஸ்ட் காட்டவில்லை. இதனால் கடுப்பானார் ரியோ.

நேரா பேசுங்க
2 நிமிஷம் எல்லோரும் ஒன்னா உட்காந்து எந்திருச்சு போயிடலாம். ஏன்னா திரும்ப திரும்ப குரூப்பிஸம் குரூப்பிஸம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.. என்றார் ரியோ. அதற்கு ஷிவானி என்னை பற்றி பேசனும்னா நேரா என்கிட்ட பேசுங்க என்றார்.

உங்க மனசுலதான் குரூப்பிஸம்
அதற்கு நீ, ரம்யா, ஆஜித் உங்க 3 பேர்கிட்ட பேசனும் என்றார் ரியோ. அதற்கு பதில் சொல்லும் ரம்யா, நான் பேசிக்கிட்டுதான் இருக்கேன். உங்க மைண்ட்ல வேற ஏதோ இருக்கு.. உங்க மைண்ட்ல குருப்பீஸம் இருக்குங்றதால நீங்க இங்க கொண்டு வந்திருக்கீங்க என தடாலடியாய் விளாசி விட்டார்.

விழி பிதுங்கிய ரியோ
அதற்கு நக்கலாய் தேங்க்யூ தேங்க்யூ சோ மச் என கூறிய ரியோ, ஆமாம் நான்தான் மனசுல குரூப்பிஸம்னு வச்சுருக்கேன் என தன்னைத் தானே தாழ்த்தி பேசினார். அதற்கு நீங்கதானே இப்போ சொன்னீங்க நான் சொல்லலையே என ரியோவை கேட்டு விழி பிதுங்க வைத்துவிட்டார் ரம்யா.

மூக்கை உடைத்து விடுகிறார்
ரம்யா கேட்ட கேள்வியால் மிரண்டு போய்விட்டார் ரியோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், ரம்யா சிரித்துக் கொண்டே இருந்தாலும் பேச வேண்டிய இடத்தில் பேசிவிட்டு, மூக்கை உடைத்து விடுகிறார் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











