ரியோவை ஜீரோவாக்கிய ரம்யா.. கேப்ஸ் அடுத்த ஜீரோ நீதான்.. கங்கணம் கட்டிய பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலில் நீல நிற பந்துகளை போட்டு ஹவுஸ்மேட்டுகளுக்கு மதிப்பெண்களை கொடுத்தார்.

சிவப்பு பந்து
மூன்று சைஸ்களாக பந்துகளை போட்டு அதற்கு ஏற்ப மதிப்பெண்களை கொடுத்தார். அதனை தொடர்ந்து சிவப்பு பந்துகளை போட்டார். சிவப்பு பந்துகளை பிடித்த டீம்மின் மொத்த மதிப்பெண்களும் ஜீரோவானது.

நான்காம் பகுதி
முதலில் டீம் கேம்மாக இருந்த இந்த டாஸ்க் பின்னர் இன்டிவிட்ஜுவல் கேம்மாக மாறியது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பால் கேட்ச் டாஸ்க்கின் நான்காம் பகுதி தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

தங்க நிற பந்துகள்
இந்த சுற்றுக்கான விதிமுறைகளை படிக்கிறார் ஷிவானி. அதன்படி இந்த சுற்றில் தங்க நிற பந்துகள் கொடுக்கப்படுகிறது. தங்க நிற பந்துகளை பிடித்து விட்டால் போர்டில் இருக்கும் ஷக்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்ததெடுத்து அதை செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஜீரோவாக்கிய ரம்யா
இதில் பாலாஜி, உங்கள் மதிப்பெண்களில் 100 புள்ளிகள் அதிகரிக்கப்படுகிறது என்ற சக்தியை பயன்படுத்தி கொள்கிறார். அடுத்த சக்தியை எடுக்கும் ரம்யா, ரியோவின் மொத்த மதிப்பெண்களையும் பூஜ்ஜியமாக்கிவிடுகிறார்.

அடுத்த ஜீரோ நீதான்
அடுத்துவரும் கேபி பாலாஜியின் மதிப்பெண்களை பூஜ்ஜியமாக்குவதாக தெரிகிறது. அவரை கட்டியணைத்து பாராட்டுகிறார் ரியோ. இதனால் கடுப்பாகும் பாலாஜி கேப்ஸ் அடுத்த ஜீரோ நீதான் என்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் சூடு பறக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











