"என் பொண்டாட்டியை விட ரம்யாதான் அழகு".. ரியோ குமட்டுல.. குத்து கன்பர்ம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 4 ல் புகழ்பெற்ற போட்டியாளர்களில் ரியோ ராஜூம் ஒருவர். இப்போட்டியில் மூன்றாவது இடம்பிடித்தார். தற்போது ரியோ பல படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போது ரியோ மற்றும் அவரது காதல் மனைவி ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர். இவர்களின் காதல் வெளிப்பாடுகளை கமலும் பல சமயங்களில் பாராட்டினார்.

அதே சமயம் மற்றொரு போட்டியாளரான ரம்யா பாண்டியனை, ரியோ தூக்கியதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ரம்யா பாண்டியனை பல சமயங்களில் ரியோ பாராட்டி வந்த நிகழ்வுகளும் நடந்தன.
தற்போது ரியோ தான் புதிதாக நடித்துள்ள, பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் புரோமோ வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படம் பற்றிய ரியோ பல பேட்டிகளிலும் கூறி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரியோ, என் மனைவி ஸ்ருதியை விட ரம்யா பாண்டியன் தான் ரொம்ப அழகு. ஸ்ருதியை விட ரம்யாவுக்கு மூக்கு கூர்மையானதாக இருக்கும் என வெளிப்படையாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











