சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ரொமான்ஸ் செய்த வனிதா.. ஜூலியை புகழ்ந்த ராஜமாதா.. பிக்பாஸ் ஜோடிகள் ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி கடந்த 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களிலும் பங்கேற்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். விஜய் டிவி பிரபலங்களான ஈரோடு மகேஷ் மற்றும் தீனா ஆகியோர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் பிரபலங்கள்
இதில் வனிதா- சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு ஜோடியாகவும், ஷிவானி நாராயணன் - சோம் சேகர் ஒரு ஜோடியாகவும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் கேபி - ஆஜித் ஒரு ஜோடியாகவும் பங்கேற்றுள்ளனர்.

ஜூலி - சென்ட்ராயன்
அறந்தாங்கி நிஷா- தாடி பாலாஜி, ஷாரிக் - அனிதா சம்பத் ஆகிய ஜோடிகளும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஜூலி - சென்ட்ராயன் ஒரு ஜோடியாகவும் சம்யுக்தா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஒரு ஜோடியாகவும் பங்கேற்றுள்ளனர்.

இந்த வார ப்ரோமோ
ஃபாதிமா பாபு - மோகன் வைத்யா ஒரு ஜோடியாகவும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்துக்கான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ரொமான்ஸ் ஃபீல்
சுரேஷ் சக்கரவர்த்தி எம்ஜிஆர் கெட்டப்பில் வனிதாவுடன் நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணன் உங்கள் இருவருக்குள்ளும் நடனத்தின் போது ரொமான்ஸ் ஃபீல் ஆனதாக கூறுகிறார்.

உதைத்த வனிதா
அவர்களின் நடனத்தை பாலா கலாய்க்க கீழே இழுத்து தள்ளுகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி, பின்னால் காலால் உதைக்கிறார் வனிதா விஜயக்குமார். கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது அவர்களின் செக்மெண்ட்.

ஜூலியை புகழ்ந்த ரம்யா
அடுத்தபடியாக ஜூலியும் சென்ட்ராயனும் மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதில் ஜூலியின் நடனத்தை பார்த்து சூப்பர் என புகழ்ந்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பெயரை சரிக்கட்ட
இதேபோல் நகுலும் சென்ட்ராயன்- ஜூலியின் டான்ஸை புகழ்ந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜூலி நடனமாடுவார். அந்த நிகழ்ச்சியின் போது கெடுத்துக் கொண்ட பெயரை இந்த நிகழ்ச்சியின் மூலம் சரி செய்து பட வாய்ப்புகளை பெற ஜூலி முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications