Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சமந்தா கணவரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ராணி சிவகாமி தேவி'!
ஐதராபாத் : திருமணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சினிமா, சீரியல் என்று நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 'பாகுபலி', 'பாகுபலி-2' படங்களுக்குப்பிறகு மார்க்கெட் சூடுபிடித்தது.
தற்போது கமலின் 'சபாஷ் நாயுடு' சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் 'பால கிருஷ்ணுடு' உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
'சைலஜா ரெட்டி அல்லுடு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது. இந்தப் படத்தில் 'சைலஜா ரெட்டி' எனும் முக்கிய ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாராம். அதனால் அவரைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருக்கிறதாம். தெலுங்கில் சிவகாமி தேவிக்கு ராஜயோகம்தான்.