குயின் வெப்சீரிஸ்... கவுதம் மேனனின் சசிகலா இல்லாத ஜெயலலிதா பயோபிக்

Recommended Video

ஜெயலலிதாவின் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது தான்- நடிகை கங்கனா- வீடியோ

சென்னை: நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் குயின் என்ற வெப் சீரிஸாக எடுத்துவரும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், அதில் ஜெயலலிதாவின் வலதுகரமாக இருந்து தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவின் கதாபாத்திரம் இல்லாமலேயே எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையாக இருந்து தமிழக முதல்வராக உயர்ந்த முன்னான் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை இயக்குநர் கௌதம் மேனன் 'குயின்' எனும் பெயரில் உருவாக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் செல்வி.ஜெயலலிதாவாக நடிக்கும் இந்த வெப் சீரீஸின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடித்த காலம், அ.தி.மு.கவில் இணைந்து அரசியலில் காலடி வைத்தது, முதலமைச்சராக ஆனது, கடைசியில் அவரது இறப்பு என அனைத்தையும் படமாக்கி வருகிறார். படத்துக்கு குயின் என்றும் பெயர் சூட்டி இருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அம்மா

அம்மா


அம்மா என்று லட்சக்கணக்கான அதிமுகவினரால் அன்போடும் பயபக்தியோடும் அழைக்கப்பட்டவர் செல்வி.ஜெயலலிதா. இவர் பல இன்னல்கள், தடைகள், தோல்விகளை தாண்டி திரை வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் மகத்தான வெற்றி பெற்று சாதித்தும் காட்டியுள்ளார்.
தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவரது வாழ்க்கை கதையை வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுத்து வருகிறார்.

தலைவி

தலைவி

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தலைவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கிறார். அதனால் ஜெயலலிதாவின் அரசியல் பிரச்சாரங்களை கூர்மையாக கவனித்து 'அவரைப் போலவே பேசி பழகி வருகிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் தலைவி படத்தை எடுக்க உள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். தலைவி படக்குழு ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கிடம் என்ஓசி (NOC) பெற்று இப்படத்தை தயாரிக்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் தலைவி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, தற்போது எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

பாரதிராஜா

பாரதிராஜா

ஜெயலலிதா நடிகையாக வேண்டும் என்று விரும்பிய காலத்தில் இருந்து படத்தின் கதை ஆரம்பிக்க உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் இயக்குனர். இன்னொருபுறம் இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் மும்பை நிறுவனம் ஒன்று ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயன்று வருகிறது.

குயின் வெப் சீரிஸ்

குயின் வெப் சீரிஸ்

இந்த நிலையில், தற்போது சத்தம் இல்லாமல் ஜெயலலிதா வாழ்க்கையை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.
ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடித்த காலம், அ.தி.மு.கவில் இணைந்து அரசியலில் காலடி வைத்தது, முதலமைச்சராக ஆனது, கடைசியில் அவரது இறப்பு என அனைத்தையும் படமாக்கி வருகிறார். படத்துக்கு குயின் என்றும் பெயர் சூட்டி இருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

ஜெயலலிதா பயோபிக்கில் ஜெயலலிதாவாக மொத்தம் மூன்று நடிகைகள் நடிப்பதாக தகவல் வந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் அவருக்கு ஒருநாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குயின் வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைசில் முடிப்பதற்ககாக இரண்டு யூனிட்டாகச் ஷூட்டிங் நடந்து வருகிறது. ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்கி வருகிறார்.

அம்மு

அம்மு

சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவில் கிடாரி இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் இளமைத் தோற்றமுடன் நடிக்கும் காட்சிகளை ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கி இருக்கிறார்கள். அவரது தற்போதைய வீடு நிறைய மாற்றங்களுடன் இருப்பதால் ஏ.வி.எம்மில் அவர் வீடு போல் இருக்கும் வீட்டில் ஷூட்டிங் நடக்கிறது.

சசிகலா இல்லை

சசிகலா இல்லை

ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் திருப்புமுனை உண்டாக்கியவர், மிக முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரின் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருதிவிராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்து வருகிறார். ஜெயலலிதாவுடன் வலது கரமாக ஜெயலலிதாவுடன் பல காலம் வசித்து சிறை சென்ற சசிகலா கதாபாத்திரம் இந்த பயோபிக்கில் இல்லையாம்.

குயின் போஸ்டர்

குயின் போஸ்டர்

மொத்தமாக ஆறு மணி நேரம் ஓடக்கூடிய வெப் சீரிஸாகப் படமாக்கி இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். குயின் வெப் சீரிஸ் மக்கள் பார்வைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வெப் சீரிஸின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரம்யாகிருஷ்ணன் ஜெவின் தோற்றத்தில் திரும்பி நிற்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரையில் காண தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். குயின் வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரும் பிரபல தெலுங்குப்பட இயக்குநருமான வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X