Ramya Krishnan - சரக்கு பார்ட்டியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மூத்த நடிகையுடன் ரம்யா கிருஷ்ணன் அலப்பறை
சென்னை: Ramya Krishnan Birthday (ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள்) நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மது விடுதியில் கொண்டாடிய புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன்.பத்திரிகையாளர் சோவின் உறவினரான இவர் பல வருடங்களாக நடித்துவருகிறார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு காலம் செல்ல செல்ல கேரக்டர் ரோல்களை செய்ய ஆரம்பித்தார்.

நீலாம்பரி: ரம்யா கிருஷ்ணன் செய்த பாத்திரங்களிலேயே காலத்துக்கும் அழிக்க முடியாத கதாபாத்திரம் என்றால் படையப்பா படத்தில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம். ரஜினி என்ற பெரிய ஆளுமைக்கு வில்லியாக நடித்து அதகளம் செய்திருந்தார். ரஜினியேகூட அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து வியந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல மேடைகளில் கூறியும் இருக்கிறார்.
மரகதவள்ளி: அதேபோல் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் மற்றொரு சிறப்பான கதாபாத்திரம் என்றால் பஞ்ச தந்திரம் படத்தில் அவர் ஏற்றிருந்த மரகதவள்ளி கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திலும் படு காமெடியாகவும், கொஞ்சம் கிளாமராகவும் நடித்து அசத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். குறிப்பாக வந்தேன் வந்தேன் பாடலில் சிம்ரனுக்கு போட்டியாக நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜமாதா: இப்படி பல கதாபாத்திரங்களில் கலக்கிய ரம்யா கிருஷ்ணனை இந்தியா முழுவதும் கொண்டு போய் சேர்த்த படம் பாகுபலி. அந்தப் படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது குரலாலும், நடிப்பாலும் அதகளம் செய்தார். அந்தப் படம் வெளியானதிலிருந்து ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் எங்கள் ராஜமாதாவே என்றுதான் அழைத்து வருகிறார்கள். நீலாம்பரிக்கு பிறகு ராஜமாதா கதாபாத்திரம் அவருக்கு அடையாளமாக மாறியிருக்கிறது.
பிறந்தநாள்: இந்நிலையில் இன்று அவர் தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க ரம்யா கிருஷ்ணன் மது விடுதியில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார். அவருடன் ராதிகாவும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











